பெரும் ரசிகர்கள் படையினைக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான “ஜெயிலர்” திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று வெளியானது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கலாநிதி மாறன் தயாரிப்பில் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படத்தை கொண்டாடும் விதமாக கைதிகள் போல் வேடமணிந்து கேக் வெட்டிக் கொண்டாடிய ரசிகர்கள். மதுரையில் உள்ள திரையரங்குகளில் இத்திரைப்படத்தை காண சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் கைதிகள் போல் வேடம் தரித்து படத்தை காணவந்தனர்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் “ஜெயிலர்” திரைப்படத்தின் முதல் ஷோவை காண படக்குழுவினர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் சில நடிகர்கள் வருகை தந்தனர். நடிகர் தனுஷ் அவர்களும் படத்தை காண ரோகிணி திரையரங்கிற்கு சென்றார்.
இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இது ஒரு புது கதாபாத்திரமாகவும் ஒரு புது அத்தியாயமாகவும் இருக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
– கோ. தீபா புவனேஸ்வரி

