தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் மே 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கலாம் எனவும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 9 ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 8-ம் தேதி வெளியாகும் நிலையில் விண்ணப்ப விநியோக குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 633 சுயநிதி தனியார் மற்றும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது.
அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, கல்லூரிகள் விபரம் அறிய https://tngasa.com/ என்ற இணைய தளத்தை தொடரலாம். தனியார் கல்லூரிகளை பொறுத்தவரை அவர்களது கல்லூரி இணைய தளத்தையோ அல்லது அக்கல்லூரி அலுவலகத்தையோ நேரில் தொடர்பு கொண்டு சேர்க்கை விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.