கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக சட்டத் துறை சார்பில் மண்டல வாரியாக பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என்று அதன் விபரப்பட்டியலை சட்டத்துறைச் செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, எம்.பி., அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர்அவர்களின் அறிவுரைக்கிணங்க தி.மு.க. சட்டத்துறைச் சார்பில் “தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா”வினையொட்டி மண்டல வாரியாக பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.
இதுகுறித்து தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., அறிக்கை வருமாறு:–
“தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா”வினையொட்டி தி.மு.க. சட்டத் துறையின் சார்பில்,சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்குட்பட்ட இளம் வழக்கறிஞர்களுக்கான பேச்சு போட்டிகளை கீழே குறிப்பிட்டள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள வாறு நடத்திட திட்டமிடப் பட்டுள்ளது. போட்டிகள் தமிழில் மட்டுமேநடத்தப்படும்.
போட்டிகளுக்கான தலைப்புகள் பின்வருமாறு :
1. கலைஞரின் பார்வையில் சமூக நீதி,
2. கலைஞரின் பார்வையில் மாநிலசுயாட்சி,
3. கலைஞரின் பார்வையில் மகளிர் முன்னேற்றம்,
4. கலைஞரின் பார்வையில் தொழில் வளம்,
5. கலைஞரின் பார்வையில் கல்வி.
மேற்சொன்ன இந்த ஐந்து தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பினை போட்டி துவங்குவதற்கு முப்பது நிமிடங் களுக்கு முன்பு போட்டி நடத்தும் நடுவர்கள் அறிவிப்பார்கள். அந்த தலைப்பினை ஒட்டியே போட்டியாளர்கள் ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் தமிழில் பேசிடவேண்டும். மாநிலம் முழுதும் உள்ள சட்ட கல்லூரிகளை ஆறு மண்டலங்களாக பிரித்து, அந்தந்த மண்டலத்தில் எந்த தேதியில், எந்த ஊரில் போட்டிகள் நடைபெறும் என்பதை கீழே இணைத்துள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போட்டிகளுக்கான பரிசு விவரம். ஒவ்வொரு மண்டலத்திலும் முதல் பரிசு ரூபாய் 50,000/- தங்கப் பதக்கம், சான்றிதழ், இரண்டாம் பரிசு – ரூபாய் 25,000/- வெள்ளிப்பதக்கம், சான்றிதழ், மூன்றாம் பரிசு – ரூபாய் 15,000 / -தாமிரப் பதக்கம், சான்றிதழ், இரண்டு ஆறுதல் பரிசு – ரூபாய் 5,000/- வெண்கலப்பதக்கம், சான்றிதழ். வழங்கப்படும்.
ஒவ்வொரு மண்டலத்திலும் வெற்றி பெற்ற முதல் மூன்று பரிசு பெற்றவர்களுக்கான (சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்கள்) “மாநில அளவி லான இறுதிப் போட்டி” வருகிற 6.12.2023 (புதன்கிழமை) அன்று நீலாங்கரை, “ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில்” நடைபெறும்.
மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரி முதல்வர்கள் தங்கள் கல்லூரியிலிருந்து பங்கு பெற விரும்பும் மாணவர்களின் பட்டியலினை, தங்கள் மண்டலத்தின் போட்டி நடைபெறும் நாளுக்குமுன்புகீழே குறிப்பிடப்பட்டுள்ள “பேச்சுப் போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம்” ஒப்படைக்க வேண்டுகிறோம். தவிர்க்க முடியாத காரணங்களால் பெயர் அளிக்க முடியாத மாணவர்கள் போட்டி நடக்கும் இடத்தில் நேரடியாக உரிய அடையாள அட்டை அல்லது கல்லூரி முதல்வரின் அனுமதி கடிதத்துடன் கலந்து கொள்ளலாம்.
இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு முதல் பரிசு – ரூபாய் 1,00,000/- தங்கபதக்கம், சான்றிதழ், இரண்டாம் பரிசு – ரூபாய் 50,000/- வெள்ளிப்பதக்கம், சான்றிதழ், மூன்றாம் பரிசு – ரூபாய் 30,000/- தாமிரப்பதக்கம், சான்றிதழ், இரண்டு ஆறுதல்பரிசு – ரூபாய் 10,000/= வெண்கலப்பதக்கம், சான்றிதழ்.
பேச்சுப் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கே.எஸ். இரவிச்சந்திரன் (சட்டத்துறை இணைச் செயலாளர் 98400-22250), ஜெ. பச்சையப்பன் – (சட்டத் துறை துணைச் செயலாளர் 98402-60178 ) கே.சந்துரு – (சட்டத் துறை துணைச் செயலாளர் 94440-06999), கே.ஜே.சரவணன் – (தலைமைக் கழக வழக்கறிஞர் 98410-57345)
மண்டல வாரியாக பேச்சுப் போட்டி நடைபெறும் தேதி, இடம் ஆகிய விவரங்கள்
30.09.2023 – (மாணவர்கள்)
01.10.2023 – (வழக்கறிஞர்கள்)
அரசு சட்டக் கல்லூரி, செங்கல்பட்டு (இடம்), டாக்டர்.அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, பட்டறைப் பெரும்புதூர், திருவள்ளூர் வட்டம் (ம) மாவட்டம், பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக் கழகம், சென்னை, சவிதா பல்கலைக் கழகம், சென்னை, வேல் டெக் ரங்கராஜன் டாக்டர்.சகுந்தலா ஆர் & டி இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் & டெக்னாலஜி, சென்னை, விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேசன், காஞ்சிபுரம் , சாய் பல்கலைக்கழகம், சென்னை. டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரவாயல், சென்னை. பிரிஸ்ட் பல்கலைக்கழகம், புதுச்சேரி வளாகம், புதுச்சேரி
07.10.2023 – (மாணவர்கள்)
08.10.2023 – (வழக்கறிஞர்கள்)
அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி (இடம்)
எஸ்.தங்கப்பழம், சட்டக் கல்லூரி, தென்காசி (தனியார்) , துளசி பெண்கள் சட்டக் கல்லூரி, தூத்துக்குடி (தனியார்) , முகில், சட்டக் கல்லூரி, கன்னியாகுமரி (தனியார்),
கலசலிங்கம் அகெடமி ஆப் ரிசர்ச் & எஜிகேசன், விருதுநகர்
14.10.2023 – (மாணவர்கள்)
15.10.2023 – (வழக்கறிஞர்கள்)
அரசு சட்டக் கல்லூரி, சேலம் (இடம்)
அரசு சட்டக் கல்லூரி, வேலூர் , அரசு சட்டக் கல்லூரி, தருமபுரி , அரசு சட்டக் கல்லூரி, கோயமுத்தூர், மத்திய சட்டக் கல்லூரி, சேலம் (தனியார்), அரசு சட்டக் கல்லூரி, நாமக்கல்
கேஎம்சி சட்டக் கல்லூரி, திருப்பூர் (தனியார்), ஈரோடு சட்டக் கல்லூரி, ஈரோடு (தனியார்), காரூண்யா பல்கலைக் கழகம், கோயமுத்தூர்
21.10.2023 – (மாணவர்கள்)
22.10.2023 – (வழக்கறிஞர்கள்)
அரசு சட்டக் கல்லூரி, மதுரை (இடம்)
அரசு சட்டக் கல்லூரி, காரைக்குடி, அரசு சட்டக் கல்லூரி, இராமநாதபுரம், அரசு சட்டக் கல்லூரி, தேனி, பிரிஸ்ட் பல்கலைக்கழக வளாகம், அரசனூர், சிவகங்கை, ஜி.டி.என். சட்டக் கல்லூரி, திண்டுக்கல் (தனியார்)
28.10.2023 – (மாணவர்கள்)
29.10.2023 – (வழக்கறிஞர்கள்)
டாக்டர்.அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, புதுப்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் (இடம்), அரசு சட்டக் கல்லூரி, விழுப்புரம்
சரஸ்வதி சட்டக் கல்லூரி, திண்டிவனம் (தனியார்) , பாரத் பல்கலைக் கழகம், சேலையூர், சென்னை.
செட்டிநாடு அகெடமி ஆப் ரிசர்ச் & எஜிகேசன், கேளம்பாக்கம், சென்னை.
ஹிந்துஸ்தான் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி & சயின்ஸ், சென்னை
சத்தியபாமா இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் & டெக்னாலஜி பல்கலைக்கழகம், ஜேப்பியார் நகர், சென்னை. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம்
வேல்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி & அட்வான்ஸ்டு ஸ்டடிஸ் (விஸ்டாஸ்), வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை. வி.ஐ.டி. பல்கலைக் கழகம், வேலூர் (சென்னை வளாகம்)
தமிழ்நாடு டாக்டர்.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை.
04.11.2023 – (மாணவர்கள்)
05.11.2023 – (வழக்கறிஞர்கள்)
அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி (இடம்)
அன்னை தெரசா சட்டக் கல்லூரி, புதுக்கோட்டை (தனியார்) , சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர் , தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம், திருச்சிராப் பள்ளி., தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகம், திருச்சிராப்பள்ளி
இவ்வாறு தி.மு.கழக சட்டத் துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ, எம்.பி., தெரிவித்துள்ளார்.