ஐபிஎல் கிரிக்கெட் 16 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தியது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் ஸ்டெம்பிங் முறையில் ஷூப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தினார் கேப்டன் தோனி. கடைசிப் பந்து வரை சென்ற ஐபிஎல் 2023 இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது.
இறுதி போட்டியின் பெருமைக்குரிய ஆட்ட நாயகன் விருதை டெவான் கான்வே வென்றார். இந்த 16 வது தொடரில் அனைத்து போட்டிகளிலும் எதிரனிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது குஜராத் அணி. கில் அடித்து ஆடியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அவரே தொடர் நாயகன் ஆக தேர்வாகி இருக்கிறார். அதுபோல பல்வேறு பிரிவுகளில் வீரர்களுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டது.
ஐபிஎல் 2023 விருதுகள்: முழுப் பட்டியல்!
விருதுகள் பட்டியல்:
எமெர்ஜிங் பிளேயர் – யஷஸ்வி ஜெயிஸ்வால் (ரன்கள் – 625 ஸ்டிரைக் ரேட் – 164)
எலெக்ட்ரிக் ஸ்டிரைக்கர் – கிளென் மேக்ஸ்வெல் (ஸ்டிரைக் ரேட் – 183)
கேம் சேஞ்சர் விருது – ஷுப்மன் கில்
தொடர் நாயகன் – ஷுப்மன் கில்
அதிக பவுண்டரிகள் – ஷுப்மன் கில் (85 பவுண்டரிகள்)
நீண்ட தூரத்துக்கு சிக்ஸர் அடித்த வீரர் – ஃபாஃப் டு ப்ளஸி (115 மீட்டர்)
சிறந்த கேட்ச் – ரஷித் கான்
ஃபேர்பிளே விருது – தில்லி கேபிடல்ஸ்
அதிக விக்கெட்டுகள் – முகமது ஷமி
அதிக ரன்கள் – ஷுப்மன் கில்
[…] பகிர்கிறார் சுதர்சன். Also Read : ”ஐபிஎல் 2023 விருதுகள்: முழுப் பட்டியல்.… சாய் சுதர்சனின் இன்னிங்ஸைப் […]