சேலம் அருகில் உள்ள சேசன்சாவடி என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து ஒரு வயதுக்குள்ளாகவே தாய் தந்தையரை இழந்து உற்றார் சிலர் உதவியால் சேலம் மாநகருக்கு வந்து நெசவாளியாக, ஓவியராக, வணிகராக தன்னை நெறிப்படுத்திக் கொண்டு பகுத்தறிவுவாதியாக தனது 17 வயதில் திராவிட இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் ஈசன் கே.துரைசாமி.
தீவிரமாக சமுகப்பணியாற்றி அதன் விளைவாக 1969-ம் ஆண்டு சேலம் நகரில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நகர்மன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார். ஒரு வியாபாரி, ஒரு தூய்மையான அரசியல்வாதியாக வாழ்ந்து திட்டமிட்டு மக்களுக்காக பணியாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார். அனைத்து தரப்பு பொதுமக்களாலும் பாராட்டு பெற்றார்.
மேலும், பத்திரிகையாளராக, அரசியல்வாதியாக, சமூகத் தலைவராக, விளம்பரத்துறை வல்லுநராக, தமிழ்சங்க நிர்வாகியாக, தொழிலதிபராக, மக்கள் தொடர்பில் தவிர்க்க முடியாத சக்தியாக இன்றும் நினைவில் போற்றப்படும் அவர் கைப்பட்ட அத்தனை துறைகளிலும் கடின உழைப்பையே மூலதனமாய் வைத்து மாபெரும் வெற்றியாளராக வாழ்ந்தார்.
வளரும் இளைய சமுகத்திற்கு முன்ஏராய் பயணித்து வழிகாட்டிக் கொண்டு இருப்பர் அய்யா சேலம் ஈசன் கே.துரைசாமி அவர்கள். அந்த பெருந்தகையாளரின் மகன் ஈசன் ஈளங்கோ, தன் தந்தையின் காலடிச் சுவட்டில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியாற்றி வருகிறார். சேலம் மாநகராட்சியின் 34 கோட்டத்தின் திமுக மாமன்ற உறுப்பினராக இருக்கிறார். தந்தையைப் போலவே, என்றும் ஏழை மக்களின் சேவகன் ஆக விளங்கிக் கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முத்தான திட்டமான, ‘’என் குப்பை; என் பொறுப்பு’’ திட்டத்தை சேலம் மாநகரிலேயே சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். ’பிளாஸ்டிக் கழிவு இல்லாத கோட்டம்’ என்ற இலக்கோடு செயல்படும் ஈசன் இளங்கோ, பள்ளி மாணவ-மாணவியர் இடையே கடிதம் எழுதும் பழக்கத்தையும் பல ஆண்டுகளாக ஊக்குவித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும், அஞ்சல் தினம் அன்று பல ஆயிரம் கடிதங்களை மாணவர்கள் மூலம் எழுத வைத்து சாதனை படைத்துள்ளார். இந்த அருஞ்செயலுக்காக தினத்தந்தி நாளிதளே அவரிடம் பேட்டி கண்டுள்ளது.
மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ, மக்கள் பணிகளைத்தாண்டி, ’ஈசன் இளங்கோ’ திரைச்சீலைகள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சேலத்தில் மட்டுமல்ல அந்த வட்டாரத்தில் உள்ள மக்களின் பேராதரவை பெற்ற நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. நம்பிக்கை பேச்சாளர், இயற்கை ஆர்வலர், எழை எளியோருக்கு ஓடோடி உதவி செய்யும் ஈசன் இளங்கோ, இன்று அவரது தந்தையின் 13 -வது ஆண்டு நினைவை போற்றும் வகையில் சிறப்பு நலத்திட்ட உதவிகளை சேலம் மக்களுக்கு செய்தார்.
பெரியார், பேரறிஞர் அண்னா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழி நின்று பணியாற்றிய திராவிட இயக்கத் தீரர் ஈசன் கே.துரைசாமி வழியில் அவரது மகன் ஈசன் இளங்கோ -வும் தலைவர் கலைஞர், தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோர் வழிநின்று அவர்கள் இட்ட கட்டளையை ஏற்று கழகப்பணியாற்றி வருகிறார்.

