தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் Civil Judge தேர்வின் 245 காலியிடங்களுக்கான அறிவிப்பு 01.06.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இக்காலிப்பணியிடத்திற்கான கல்வித்தகுதி – Degree in Law
வயது வரம்பு – For Practising Advocates/Pleaders and Assistant Public Prosecutors
பொதுப்பிரிவினருக்கு(OC) உச்ச வயது வரம்பு – 37,
இதர வகுப்பினருக்கு (SC/SCA/ST/BC/BCM/MBC/DW) – 42
வயது வரம்பு- For Fresh Law Candidates
அனைத்து பிரிவினருக்கும் உச்ச வயது வரம்பு – 29
– மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உச்ச வயது
வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.06.2023
தேர்வு நாள் – முதல் நிலை தேர்வு – 19.08.2023
முதன்மைத் தேர்வு – 28.10.2023 – 29.10.2023
இதனைத் தொடர்ந்து சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் Civil Judge தேர்விற்கான கட்டணமில்லா நேரடி (Offline) பயிற்சிவகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.
இவ்வலுவலகத்தால் நடத்தப்படவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் Civil Judge தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள GoogleFormhttp://bit.ly/candidatesregistrationform3MZZvn3 அல்லது கீழே கொடுக்கபட்டுள்ள QR code-ஐ ஸ்கேன் செய்து தங்களின் விவரங்களை பதிவுசெய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 9499966021 & 044-22501032. மின்னஞ்சல் முகவரி – peeochn@gmail.com