சென்னையில் சொந்தமாக வீடு வாங்க விரும்புவோருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) புதிய வாய்ப்பை அறிவித்துள்ளது. சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளான அசோக் பில்லர், அரும்பாக்கம், பாடி குப்பம் மற்றும் பெசன்ட் நகர் ஆகிய நான்கு இடங்களில் மொத்தம் 616 அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இடவாரியாக வீடுகளின் எண்ணிக்கை மற்றும் விலை
| பகுதி | வீடுகள் | விலை |
|---|---|---|
| அசோக் பில்லர் | 216 | ₹2.23 கோடி |
| அரும்பாக்கம் | 304 | ₹1.89–2.25 கோடி |
| பாடி குப்பம் | 80 | ₹1.62–1.75 கோடி |
| பெசன்ட் நகர் | 16 | ₹2.43–3.25 கோடி |
வீடுகளின் சிறப்பம்சங்கள்
-
2 BHK மற்றும் 3 BHK வீடுகள்
-
1,430 முதல் 1,899 சதுர அடி வரையிலான பரப்பளவு
-
கார் நிறுத்துமிட வசதி
-
மின்தூக்கி (Lift) வசதி
-
24 மணி நேரப் பாதுகாப்பு
-
24 மணி நேரத் தண்ணீர் வசதி
விண்ணப்பம் தொடக்கம் – 28.11.2026
கடைசி நாள்- 27.12.2026
விண்ணப்பக் கட்டணம்- ₹826 (GST உட்பட)
எவ்வாறு விண்ணப்பிப்பது?
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
TNHB அதிகாரப்பூர்வ இணையதளம் – https://tnhb.tn.gov.in/
இந்தக் குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு குலுக்கல் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தகுதி, வருமான வரம்பு, இடஒதுக்கீடு மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த முழுமையான விதிமுறைகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்க்க வேண்டும். வீடுகளின் விலை, வங்கிக் கடன் வசதி மற்றும் மாதத் தவணை ஆகியவற்றையும் பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
