Madras Murasu

சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருது..! தமிழ்நாடு போலீஸ் முழு பட்டியல் வெளியானது

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல் துறை, ஊர்க்காவல் படை, குடிமைப்பாதுகாப்பு, சிறைச்சாலைத் துறை ஆகிய துறைகளில் சிறப்பாகச் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும் குடியரசுத்தலைவர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, காவல் துறையிலிருந்து 83 பேரும், தீயணைப்புத் துறையிலிருந்து 4 பேரும், குடிமைப்பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 3 பேரும், சிறைத் துறையைச் சேர்ந்த 2 பேரும் என மொத்தம் 92 பேர் சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், வீரதீரச் செயலுக்கான விருதுக்கு 301 பேரும், திறம்பட சேவையாற்றியவர்களுக்கான பதக்கங்களுக்காக மொத்தம் 664 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பாகச் சேவையாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கான குடியரசுத்தலைவர் விருதுக்காக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரும், திறம்பட சேவையாற்றியதற்கான பதக்கங்களுக்காக தமிழக காவல்துறையைச் சேர்ந்த 17 பேரும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவரின் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகளின் பெயர்கள்:

1. திரு ஜே விஜய் ஆனந்த், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு

2. திரு கே ராமச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு

3. திரு எஸ் குமார், உதவி கமாண்டன்ட், தமிழ்நாடு

சிறந்த பணிக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக காவல் துறையினரின் பெயர் பட்டியல்:

1. திருமதி எஸ் மாலதி, காவல் ஆய்வாளர், தமிழ்நாடு

2. திரு எஸ் பாஸ்கர், காவல் உதவி ஆய்வாளர், தமிழ்நாடு

3. திரு கே சிவசங்கர், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், தமிழ்நாடு

4. திரு எம் சோமசுந்தரம், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், தமிழ்நாடு

5. திரு பி கோவிந்தராஜு, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், தமிழ்நாடு

6. திரு எஸ் சண்முகம், காவல்துறை துணை கண்காணிப்பாளர், தமிழ்நாடு

7. திருமதி ஜி பத்தருன்னிசா பேகம், காவல் ஆய்வாளர், தமிழ்நாடு

8. திரு சி மதிமாறன், காவல் ஆய்வாளர், தமிழ்நாடு

9. திருமதி கே சரஸ்வதி, காவல் ஆய்வாளர், தமிழ்நாடு

10. திரு பி மாரியப்பன், காவல் ஆய்வாளர், தமிழ்நாடு

11. திருமதி எஸ் லட்சுமி, காவல் ஆய்வாளர், தமிழ்நாடு

12. திருமதி ஜெயா பிரின்சஸ், காவல் ஆய்வாளர், தமிழ்நாடு

13. திரு கே கோபால், காவல் ஆய்வாளர், தமிழ்நாடு

14. திரு எஸ் மணிமாறன், உதவி கமாண்டன்ட், தமிழ்நாடு

15. திருமதி சி லட்சுமி, காவல் ஆய்வாளர், தமிழ்நாடு

16. திரு ஆர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர், தமிழ்நாடு

17. திரு என் சதுரகிரி, காவல் உதவி ஆய்வாளர், தமிழ்நாடு

Scroll to Top