Madras Murasu

ஸ்ரேஷ்டா (SHRESHTA) 2027 நுழைவுத் தேர்வு நவ 30 கடைசி நாள்!

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில், தேசிய தேர்வு முகமை (NTA), ஸ்ரேஷ்டா (SHRESHTA) 2027 நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திட்டத்தின் நோக்கம்:

பட்டியலின (SC) மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் அல்லாத சீர்மரபினர் (DNT) சமூகங்களைச் சேர்ந்த தகுதியும் திறமையும் கொண்ட மாணவர்களுக்கு, தனியார் உண்டு உறைவிடப் பள்ளிகளில் கல்வி பயில வாய்ப்பு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசின் முழுச் செலவில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் சேர்க்கை வழங்கப்பட உள்ளது.

சுமார் 2,400 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 2,160 பேர் பட்டியலின மாணவர்கள், 240 பேர் DNT பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர். மாணவ, மாணவியர் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

முக்கியத் தேதிகள்
விவரங்கள் தேதிகள்
ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் 14.11.2026
விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2026
விண்ணப்பத் திருத்தம் 02.12.2026 முதல் 04.12.2026 வரை
தேர்வு நகரம் அறிவிப்பு 20.12.2026
ஹால் டிக்கெட் வெளியீடு 03.01.2027
நுழைவுத் தேர்வு 10.01.2027 (ஞாயிற்றுக்கிழமை)
தேர்வு முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்
தேர்வு விவரங்கள்
  • தேர்வு பெயர்: SHRESHTA 2027

  • கல்வியாண்டு: 2027–28

  • தேர்வு மையங்கள்: நாடு முழுவதும் 192 நகரங்கள்

  • தேர்வு நேரம்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

  • தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (OMR)

  • வினா வகை: பல்விடைத் தேர்வு (MCQ)

  • தேர்வு மொழி: இந்தி மற்றும் ஆங்கிலம்

  • விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

விண்ணப்பிக்கும் முறை

மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளங்கள்

  • https://exams.nta.nic.in/shreshta/

  • https://nta.ac.in/

முக்கிய அறிவுரை:

விண்ணப்பிக்கும் முன்பு SHRESHTA 2027 தகவல் கையேட்டைப் படித்து, கல்வித் தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம், தேர்வு முறை, தேர்ச்சி விதிமுறைகள் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பதாரர்களும் பெற்றோர்களும் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தைத் தொடர்ந்து பார்வையிட்டு புதிய அறிவிப்புகளைத் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பு: விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2026 (இரவு 11.50 மணி).

Scroll to Top