Madras Murasu

இந்தியன் வங்கியில் 1,500 அப்ரண்டிஸ் இடங்கள்! பட்டதாரிகள் நவம்பர் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் (Indian Bank), 2026–27ஆம் நிதியாண்டிற்கான அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 1,500 பயிற்சி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள பட்டதாரிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 01.04.2022 முதல் 01.11.2026 வரையிலான காலகட்டத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

வயது வரம்பு: 01.11.2026 அன்று 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

பயிற்சிக் காலம் மற்றும் உதவித்தொகை: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். பணியிடத்தின் அமைவிடத்தைப் பொறுத்து மாதம் ரூ.12,300 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.

தமிழகத்திற்கு 270 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித் திறன் தேர்வு உள்ளிட்ட நடைமுறைகளின் அடிப்படையில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Careers பகுதியைத் தேர்வு செய்து, அப்ரண்டிஸ் அறிவிப்பின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். NATS 2.0 தளத்திலும் பதிவு செய்வது அவசியம்.

  • விண்ணப்பம் தொடக்கம்: 05.11.2026

  • கடைசி நாள்: 25.11.2026

  • விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.800 + GST; எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175 + GST.

  • இணையதளம்: https://indianbank.bank.in/en/career

  • NATS இணையதளம்: NATS 2.0

Scroll to Top