’’காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 4 ஆண்டுகள் கல்வி பட்டப்படிப்பு 2023-2024-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, டெல்லியில் இயங்கிவரும் தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்சி (B.Sc.) மற்றும் பி.எட் (B.Ed.) தனித்தனியே படிக்கும்போது 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி பட்டப்படிப்பு மூலம் பிஎஸ்சி மற்றும் பி.எட் படிப்புக்கான காலம் 4 ஆண்டுகள்தான்.
இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கை புது டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமையின் கீழ் இயங்கும், தேசிய பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடைபெறும். இத்தேர்வினை அஸ்ஸாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 13 மொழிகளில் எழுதலாம்.
காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி பட்டப்படிப்புக்கு ஜூலை 25- ம் தேதிக்குள் https://ncet.samarth.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 4 YearIntegrated Teacher Education Programme (ITEP) in selected Central/State Universities/Institutions including IITs, NITs, RIEs, and Government Colleges for the Academic Session 2023-24. இந்த படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க ஜுலை 25-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பு பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை https://ncet.samarth.ac.in மற்றும் https://www.nitpy.ac.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம் என காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.