spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு''அரசு மருத்துவமனைகளில் நர்சிங் ஆபீசர் வேலை உடனே விண்ணப்பிக்கலாம்..!''

    ”அரசு மருத்துவமனைகளில் நர்சிங் ஆபீசர் வேலை உடனே விண்ணப்பிக்கலாம்..!”

    மத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சார்பில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. இந்த மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1930 நர்சிங் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    மத்திய அரசின் தொழிலாளர் நலத்துயின் கட்டுபாட்டில் செயல்படும் ‘Employee’s State Insurance Corporation’ நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. இந்த மருத்துவமனைகளில் 1930 நர்ஸ்கள் பணி இடங்களை நிரப்ப இருக்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    B.Sc. Nursing, Post Basic B.Sc Nursing, Diploma in General Nursing and Midwifery படிப்பு முடித்து விட்டு தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு கவுன்சிலில் பதிவு செய்துள்ளோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொதுப்பிரிவு மற்றும் பொருளாதரத்தில் பின் தங்கிய பிரிவினைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர் வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் 33 வயது வரையும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 35 வயது வரையும் மாற்றுத்திறனாளிகள் 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். எழுத்து தேர்வில் நர்சிங் பாடத்தில் இருந்து 100 கேள்விகள் கேட்க்கப்படும். General Aptitude and Awareness பகுதியில் இருந்து 25 கேள்விகள் இடம்பெறும். கொள்குறி வகையிலான கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும்.

    தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த வேலைக்கு மார்ச் 7 ஆம் தேதியில் இருந்து மார்ச் 27 ஆம் தேதி வரை www.upsconline.nic.in என்ற இணையத்தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மருத்துவத்துறையில் சேவையாற்ற காத்திருக்கும் செவிலியர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments