அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். நேற்று முதல் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது. வருகிற 19-ந்தேதி வரை பதிவு செய்யலாம். தரவரிசை பட்டியல் 23-ந்தேதி வெளியிடப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 25 முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் கட்ட பொது கலந்தாய்வு 30-ந்தேதி முதல் ஜூன் 9-ந் தேதி வரையிலும், 2-ம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
மாணவ-மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் செய்ய ஒவ்வொரு அரசு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
இணையதளம் ஆன்லைன் பதிவு:
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க https://www.tngasa.in/ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாவட்ட வாரியாக அர்சு கல்லூரிகள் குறித்த விபரங்கள் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் வழிகாட்டி என்று இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை முழுமையாக படித்து பார்க்கவும். ஒவ்வொரு கல்லுரியிலும் இருக்கும் பாடப்பிரிவிகள் விபரமும் அந்த கல்லூரி பெயரை சொடுக்கும் போது அது தெரியும்.
விண்ணப்பிக்கும் ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பம் மற்றும் பதிவுக்கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூபாய் 50-ம், SC ,ST பிரிவினருக்கு ரூபாய் 2 -ம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தரவரிசை பட்டியல்:
தரவாிசை பட்டியல் அந்தந்த கல்லூாி வலைத்தளங்களில் வெளியிடப்படும். மூன்று தரவாிசை பட்டியல் உள்ளது அவை பின்வருமாறு:
தமிழ் தரவரிசை பட்டியல்: பனிர்ரெண்டாம் வகுப்பில் பெற்ற தமிழ் மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ் தரவாிசை பட்டியல் தயாாிக்கப்படும். இந்த பட்டியல் பி.ஏ. தமிழ் இலக்கியம் / பி.லிட். படிப்புகளின் சேர்க்கைக்கு பயன்படுதப்படும்.
ஆங்கிலம் தரவரிசை பட்டியல் : பனிரெண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்பறடயில் ஆங்கிலம் தரவாிசை பட்டியல் தயாாிக்கப்படும். இந்த பட்டியல் பி.ஏ. ஆங்கில இலக்கிய படிப்புகளின் செர்க்கைக்கு பயன்படுதப்படும்.
பொது தரவரிசை பட்டியல்: மீதமுள்ள 4 பாடங்களின் அடிப்படையில் (400 மதிப்பெண்களில்) இது தயாாிக்கப்படும். இது மற்ற அனைத்து B.A. / B.Sc. / B.Com. / B.B.A. / B.C.A. / B.S.W படிப்புகளின் செர்க்கைக்கு பயன்படுதப்படும்.
. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு செய்த பாடப்பிாிவுகளின்விருப்ப வாிசையின் அடிப்படையில் தரவாிசைக்கு ஏற்றவாறு ஒதுக்கீடு ஆணை அந்தந்த கல்லூாிகள் வழங்கும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு வழங்க பட்ட ஒதுக்கீடு ஆணையின் அடிப்படையில் அந்தந்த கல்லூாிகளுக்கு சென்று தங்கள் சேர்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.