2026ஆம் ஆண்டு நடைபெறும் UPSC குடிமைப் பணித் தேர்வின் முதல்நிலைத் தேர்வில் (Preliminary Examination) முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்தத் தொகை தகுதியான மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் கால அவகாசம்
இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுடைய மாணவர்கள் ஆன்லைன் வாயிலாகப் பதிவு செய்யலாம்.
-
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 21.11.2026
-
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2026
-
ஊக்கத்தொகை: ரூ.50,000
-
பயனாளிகள்: UPSC முதல்நிலைத் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெறும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக அரசின் திறன் மேம்பாட்டுத் துறை இணையதளத்தின் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
https://skilldevelopment.tn.gov.in/ தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத் துறை இணையதளம்UPSC குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகும் தமிழக இளைஞர்களுக்கு நிதி ஊக்கமளிக்கும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. முதல் முயற்சியிலேயே முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை பயனுள்ளதாக இருக்கும்.
