கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் தாக்கத்தினால் உருவான நச்சுப் புகைகள் வட அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் புகையினால் நியூயார்க்கில் காற்று மாசு அளவு அபாயகரமான அளவை எட்டியது. இது குறித்து நியூயார்க் வானிலை மையம் கூறும்போது, “வயதானவர்கள் மற்றும் சிறு குழந்தைகள், மோசமான காற்றின் தரத்தால் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்பதால் அவர்கள் வெளியே வருவதை குறைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளது.
இந்நிலையில் காட்டுத்தீ குறித்து, கவிப்பேரரசு வைரமுத்து, ‘கவிதை’ வடித்துள்ளார்.
காடு எரிகிறது கனடாவில்
பொறாமையைப் போல்
அணையாமல்
பல்லாயிரக்கணக்கான
ஹெக்டேர்
சாம்பல் கல்லறையில்
ஆயிரம்வகைக் காட்டுயிர்களைத்
தின்றுகொண்டே விரைகிறது தீ
நியூயார்க்கின் வானம்
புகைப் போர்வைக்குள்
ஒரு சுற்றுச்சூழல் ரசிகனாய்
வயிறெரிகிறேன்
அணைக தீயே அணைக
அழிந்த காடே எழுக