புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் 14.06.2023 திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் அறிக்கை:
கோடையின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் போதிய அளவு தண்ணீர் அருந்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தேன்.
மாணவர்கள் இரண்டு வேளை தண்ணீர் குடிக்க “வாட்டர் பெல்” ஒலிக்க வேண்டும். மாணவர்கள் தண்ணீர் குடிக்க ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினேன்.

அதன் அடிப்படையில், காலை இரண்டு நேரமும் பிற்பகல் ஒரு நேரமும்
வாட்டர் பெல் ஒலிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. மாணவர்கள் போதிய தண்ணீர் குடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்த அதிகாரிகளுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

