Home Uncategorized தனித்துவமான ‘மாநிலக் கல்விக் கொள்கை’யை வடிவமைப்பதில் தீவிரம் காட்டும் தமிழ்நாடு அரசு!

தனித்துவமான ‘மாநிலக் கல்விக் கொள்கை’யை வடிவமைப்பதில் தீவிரம் காட்டும் தமிழ்நாடு அரசு!

0
தனித்துவமான ‘மாநிலக் கல்விக் கொள்கை’யை வடிவமைப்பதில் தீவிரம் காட்டும் தமிழ்நாடு அரசு!

தனித்துவமான ‘மாநிலக் கல்விக் கொள்கை’யை வடிவமைப்பதில் தீவிரம் காட்டும் தமிழ்நாடு அரசு. நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட விதையால்தான் – இன்று நாம் கல்வியில் சிறந்த மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம் என்று குடியரசுத் தலைவர் பங்கேற்ற சென்னை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில், 6.8.2023 இந்­தி­யக் குடி­ய­ர­சுத் தலை­வர் திரௌ­பதி முர்மு முதன்மை விருந்­தி­ன­ராக கலந்து கொண்ட சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் 165-வது பட்­ட­ம­ளிப்பு விழா­வில், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் கௌரவ விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு ஆற்­றிய உரை வரு­மாறு:

“பட்­டங்­கள் ஆள்­வ­தும் சட்­டங்­கள் செய்­வ­தும் பாரி­னில் பெண்­கள் நடத்த வந்­தோம் எட்டு மறி­வி­னில் ஆணுக்­கிங்கே பெண் இளைப்­பில்லை காணென்று கும்­மி­யடி” என்று பாடி­னார் மகா­கவி பார­தி­யார்.

அதற்கு எடுத்­துக்­காக இந்­திய நாட்­டின் குடி­ய­ர­சுத் தலை­வர் நாற்­கா­லி­யில் அமர்ந்து கோலோச்சி வரும் குடி­ய­ர­சுத் தலை­வர் திர­வு­பதி முர்மு அவர்­க­ளுக்கு எனது வணக்­கங்­க­ளை­யும் வாழ்த்­து­க­ளை­யும் நான் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

பல்­க­லைக்­க­ழக மானி­யக் குழு­வா­னது (UGC) “சிறந்து விளங்­கும் திறன்­கொண்ட பல்­க­லைக்­க­ழ­கம் என்ற சிறப்பு அடை­ மொ­ழி­யினை சென்­னைப் பல்­க­லைக் க­ழ­கத்­துக்­குத் தந்­துள்­ளது.

குடி­ய­ர­சுத் தலை­வர் பங்­கேற்­றது முக்­கிய நாளாக அமைந்­துள்­ளது!

அத்­த­கைய சிறந்து விளங்­கும் திறன் கொண்ட பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பட்­ட­ம­ளிப்பு விழா­வுக்கு குடி­ய­ர­சுத் தலை­வர் திர­வு­பதி முர்மு அவர்­கள் வருகை தந்­தது – இந்­தப் பல்­க­லைக்­க­ழக வர­லாற்­றில் முக்­கி­ய­மான நாளாக இதனை மாற்றி அமைத்­துள்­ளது.

இந்­தி­யக் குடி­ய­ர­சுத் தலை­வர்­க­ளாக இருந்த சர்­வ­பள்ளி ராதா­கி­ருஷ்­ணன் அவர்­கள் -வி.வி.கிரி அவர்­கள் -நீலம் சஞ்­சீவி ரெட்டி அவர்­கள் – ஆர்.வெங்­கட்­ரா­மன் அவர்­கள் – ஏ.பி.ஜே.அப்­துல் கலாம் அவர்­கள் – என ஏரா­ள­மான குடி­ய­ர­சுத் தலை­வர்­கள் படித்த பல்­க­லைக் கழ­கம் சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கம்.

தலை சிறந்த ஆளு­மை­களை வழங்­கிய சென்னை பல்­க­லைக் கழ­கம்!

நீதி­ப­தி­கள், அர­சி­யல் தலை­வர்­கள், கல்­வி­யா­ளர்­கள், ஆராய்ச்­சி­யா­ளர்­கள், முதல் பெண் மருத்­து­வர் டாக்­டர் முத்­து­லெட்­சுமி ரெட்டி அவர்­கள் உட்­பட பல தலை­சி­றந்த பெண் ஆளு­மை­களை வழங்­கிய பெருமை இந்­தப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு உண்டு. தமிழ்­நாட்­டின் தலை­ம­கன் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் இந்த பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தான் படித்­தார். இன்று முத­ல­மைச்­ச­ராக உங்­கள் முன் உரை­யாற்­றும் நானும் இதே பல்­க­லைக்­க­ழ­கத்தை சார்ந்­த­வன் தான். அந்த வகை­யில் உங்­கள் சீனி­ய­ரா­க­வும் நான் இந்த நிகழ்ச்­சி­யிலே கலந்து கொண்­டுள்­ளேன்.

கடந்த 165 ஆண்­டு­க­ளா­கத் தென்­னிந்­தி­யா­வில் மட்­டு­மில்­லா­மல், நவீன இந்­தி­யா­வின் வளர்ச்­சிக்கு நிலை­யான பங்­க­ளிப்­பைச் சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கம் வழங்கி வரு­கி­றது. அந்­தக் காலத்­தில் இருந்­தது சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கம் மட்­டும்­தான்.

நீதிக்­கட்சி ஆட்­சிக் காலத்­தில்­தான் சென்­னைக்கு வெளியே சிதம்­ப­ரத்­தில் அண்­ணா­ம­லைப் பல்­க­லைக்­க­ழ­கம் உரு­வாக்­கப்­பட்­டது. இன்­றைய தினம் தமிழ்­நாட்­டில் மாநில அர­சின் சார்­பில் மொத்­தம் 22 பல்­க­லைக்­க­ழ­கங்­கள் உள்­ளன.

தமிழ்­நாட்­டில் தலை­சி­றந்து விளங்­கும் உயர்­கல்வி நிறு­வ­னங்­கள்!

தமிழ்­நாடு என்­பது இந்­தி­யா­வி­லேயே உயர்­கல்­வி­யில் சிறந்து விளங்­கும் மாநி­ல­மாக இருக்­கி­றது என்­பதை நீங்­கள் அனை­வ­ரும் அறி­வீர்­கள்.

இந்­தி­யா­வில் தலை­சி­றந்த 100 கல்வி நிறு­வ­னங்­க­ளில் தமிழ்­நாட்­டில் மட்­டுமே 18 நிறு­வ­னங்­கள் உள்­ளன.

தலை­சி­றந்த 100 பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் 21 தமிழ்­நாட்­டில்­தான் உள்­ளன- தலை­சி­றந்த 100 கல்­லூ­ரி­க­ளில் 32 கல்­லூ­ரி­கள் தமிழ்­நாட்­டில் உள்­ளன- தலை­சி­றந்த 100 ஆராய்ச்சி நிறு­வ­னங்­க­ளில் 10 தமிழ்­நாட்­டில் உள்­ளன- தலை­சி­றந்த 200 பொறி­யி­யல் கல்­லூ­ரி­க­ளில் 35 கல்­லூ­ரி­கள் தமிழ்­நாட்­டில் உள்­ளன- தலை­சி­றந்த மேலாண்­மைக் கல்வி நிறு­வ­னங்­க­ளில் 11 தமிழ்­நாட்­டில் உள்­ளன- 100 மருத்­து­வக் கல்வி நிறு­வ­னங்­க­ளில் 8 தமிழ்­நாட்­டில் உள்­ளன- 40 பல்­ம­ருத்­து­வக் கல்வி நிறு­வ­னங்­க­ளில் 9 தமிழ்­நாட்­டில் உள்­ளன- 30 சட்­டக் கல்­லூ­ரி­க­ளில் 2 தமிழ்­நாட்­டில் உள்­ளன- 30 கட்­ட­டக் கலைக் கல்­லூ­ரி­க­ளில் 6 தமிழ்­நாட்­டில் உள்­ளன.

தமிழ்­நாட்­டி­லுள்ள கல்­லூரி மற்­றும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் பயி­லும் மாண­வர்­கள்­க­ளைப் படிப்­பில் மட்­டு­மல்­லாது, வாழ்க்­கை­யி­லும் வெற்­றி­யா­ள­ராக்­கும் வகை­யில் எனது கனவு திட்­ட­மான “நான் முதல்­வன்” திட்­டம் சிறந்து விளங்கி வரு­கி­றது. ஆண்­டுக்­குப் பத்து லட்­சம் இளை­ஞர்­க­ளைப் படிப்­பில், அறி­வில், சிந்­த­னை­யில், ஆற்­ற­லில், திற­னில் மேம்­ப­டுத்­து­வ­து­தான் இந்­தத் திட்­டத்­தின் இலக்கு.

மாண­வர்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் அவர்­க­ளது துறை­சார்ந்த மேம்­ப­டுத்­தப்­பட்ட பயிற்­சி­கள் இந்­தத் திட்­டத்­தின்­கீழ் திறன் மேம்­பாட்­டுப் பயிற்­சி­யாக வழங்­கப்­ப­டு­கி­றது.

உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளில் பணி­யாற்­றும் பேரா­சி­ரி­யர்­கள் மற்­றும் பயி­லும் மாண­வர்­க­ளின் புதிய ஆராய்ச்­சிச் சிந்­த­னை­க­ளுக்­குப் புத்­து­யிர் வழங்­கும் வித­மாக “முத­ல­மைச்­ச­ரின் ஆராய்ச்­சித் திட்­டம்’ அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் திட்­டத்­திற்­கென தமிழ்­நாடு அர­சால் ஆண்­டுக்கு 50 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

முத­ல­மைச்­ச­ரின் புத்­தாய்­வுத் திட்­டம்!

“தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரின் புத்­தாய்­வுத் திட்­டம்”­ என்ற புதிய சீர்­மிகு திட்­டத்­தை­யும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. இளை­ஞர்­க­ளுக்கு தொழில்­முறை மற்­றும் கல்வி அடிப்­ப­டை­யில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதி­யத்­து­டன் பயிற்சி வழங்க தமிழ்­நாடு அரசு முடி­வெ­டுத்­துள்­ளது.

அர­சுப் பள்­ளி­க­ளில் படித்து கல்­லூ­ரிக்­குள் நுழை­யும் மாண­வி­க­ளுக்கு மாதந்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் வித­மாக “மூவ­லூர் இரா­மா­மிர்­தம் அம்­மை­யார் உயர்­கல்வி உறு­தித் திட்­டம்” எனும் புது­மைப்­பெண் திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக நடத்தி பெண்­கல்­வியை ஊக்­கு­வித்து வரு­கி­றோம்.

தமிழ்­நாட்­டின் தென் மாவட்­டங்­க­ளைச் சார்ந்த மாண­வர்­கள் போட்­டித் தேர்­வு­கள், ஆட்­சிப் பணித் தேர்­வு­கள், திறன்­சார்ந்த தேர்­வு­க­ளுக்­குத் தங்­க­ளைத் தயார் செய்­யும் பொருட்டு மது­ரை­யில் “கலை­ஞர் நூற்­றாண்டு நூல­கம்” பிரம்­மாண்­ட­மாக அமைக்­கப்­பட்­டுள்­ளது. ஏற்­க­னவே சென்­னை­யில் அண்ணா நூற்­றாண்டு நூல­கம் கழக அரசு ஆட்­சிக்கு வந்­தது முதல் புதுப்­பொ­லி­வு­டன் செயல்­பட்டு வரு­கி­றது.

சென்னை பல்­க­லைக் கழ­கத்­திற்கு சிறப்­புத் திட்­டம் அறி­விப்பு!

சென்னை வந்­த­போது அமெ­ரிக்க வெளி­யு­ற­வுத்­துறை செய­லா­ள­ராக இருந்த திரு­மதி ஹிலாரி கிளிண்­டன் அவர்­கள் பார்த்து பாராட்­டிய நூல­கம் அது. இவை அனைத்­தும் தமிழ்­நாட்­டின் மாணவ சக்­தியை அடுத்த கட்­டத்­துக்கு வளர்த்­தெ­டுக்­கும் முயற்­சி­கள்! குறிப்­பா­கச் சென்­னைப் பல்­க­லைக் கழ­கத்­துக்கு சிறப்­புத் திட்­டங்­கள் அறி­விக்­கப்­பட்டு அவை செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

* சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மெரினா வளா­கத்­தில் நவீன வச­தி­க­ளு­டன் ரூபாய் 30 கோடி மதிப்­பீட்­டில் புதிய விடு­தி­கள் கட்­டப்­பட்டு வரு­கின்­றன.

* 3000 பேர் அம­ரும் வகை­யி­லுள்ள சென்­னைப் பல்­க­லைக்­க­ழக நூற்­றாண்டு விழாக் கட்­ட­ட­மும் புதிய பொலி­வு­டன் சீர­மைக்­கப்­பட உள்­ளது.

* சேப்­பாக்க வளா­கத்­தில் மாண­வி­யர்­க­ளுக்­கான புதிய விடு­தி­யும் கட்­டப்­ப­ட­வுள்­ளது.

* சென்னை பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள தொழில் முனை­வோர் மற்­றும் தொழில் வழி­காட்டு மையத்­துக்கு ஒன்­றிய அர­சும் தமிழ்­நாடு அர­சும் இணைந்து 50 கோடி ரூபாய் வழங்கி உள்­ளது.

* பயி­லும்­போதே பணி என்ற திட்­டம் அம­லில் உள்­ளது.

* “திருக்­கு­றள் காட்­டும் தொழில்­நெறி” மற்­றும் “சமூ­க­நீதி” ஆகிய புதிய பாடத்­திட்­டங்­கள் அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்­ளன. – இது போன்ற சிறப்­பான முன்­னெ­டுப்­பு­க­ளைத் தொடர்ந்து எடுத்து தன்னை புதுப்­பித்­துக் கொள்­ளும் நிறு­வ­ன­மாக சென்­னைப் பல்­க­லைக் கழ­கம் செயல்­பட்டு வரு­கி­றது.

* இன்று பட்­டம் பெறு­கின்ற மாண­வச் செல்­வங்­க­ளா­கிய உங்­கள் அனை­வ­ருக்­கும் என்­னு­டைய நெஞ்­சம் நிறைந்த வாழ்த்­து­களை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

“தொட்­ட­னைத் தூறும் மணற்­கேணி மாந்­தர்க்­குக் கற்­ற­னைத் தூறும் அறிவு”

உங்­க­ளின் அறிவு, தோண்­டத் தோண்ட ஊற்­று­நீர் கிடைப்­பது போல தொடர்ந்து பெரு­கிக்­கொண்டே இருக்­க­வேண்­டும். பட்­டம் வாங்­கு­வ­தோடு உங்­க­ளது படிப்பு முடிந்து விடு­வது இல்லை. ஒரே பட்­டத்­து­டன் நிறுத்­தி­வி­டா­தீர்­கள். தொடர்ந்து படி­யுங்­கள். தகு­தி­யான வேலை கிடைத்த பிற­கும் படிப்­பதை நிறுத்­தி­வி­டா­தீர்­கள். யாரா­லும் பறிக்க முடி­யாத சொத்து என்­பது கல்­வி­ய­றிவு தான். அது அறி­வி­யல் வழிப்­பட்­ட­தாக, பகுத்­த­றி­வாக எதை­யும் கேள்வி கேட்டு ஆரா­யும் அறி­வாக இருக்­கு­மா­னால் உங்­களை யாரா­லும் வெல்ல முடி­யாது. நீங்­கள் இன்று பட்­டம் பெறு­வதை பார்த்து உங்­கள் பெற்­றோர்­கள் எத்­த­கைய மகிழ்ச்­சி­யை­யும், பூரிப்­பை­யும் அடை­கி­றார்­களோ, அதே அளவு மகிழ்ச்­சியை நானும் அடை­கி­றேன். முத­ல­மைச்­ச­ராக மட்­டு­மல்ல, உங்­கள் குடும்­பத்­தைச் சார்ந்த ஒரு­வ­னாக உங்­க­ளைப் பார்த்து பெரு­மைப்­ப­டு­கி­றேன்.

இன்று உங்­கள் குடும்­பத்­திற்­கும் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கும் பெருமை சேர்த்­துள்ள நீங்­கள், எதிர்­கா­லத்­தில் நமது தமிழ்­நாட்­டிற்­கும் இந்­தி­யா­விற்­கும் இதே­போல பெரு­மைத்­தே­டித் தர வேண்­டும், அது­தான் நான் உங்­க­ளுக்கு வைக்­கக்­கூ­டிய வேண்­டு­கோள்.

தமிழ்­நாடு அரசு சென்னை பல்­க­லைக் கழ­கத்­தின் மேம்­பாட்­டிற்கு என்­றும் துணை நிற்­கும்!

சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் வளர்ச்­சிக்­கும் மேம்­பாட்­டிற்­கும் நிதி ஆதா­ரப் பெருக்­கத்­திற்­கும் தமிழ்­நாடு அர­சும் உயர்­கல்­வித் துறை­யும் என்­றென்­றும் துணை நிற்­கும்.

சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்தை உல­க­ளா­விய நிலை­யில் உயர்­நி­லைத் தகு­தி­யில் இடம்­பெ­றச்­செய்ய இடை­ய­றாது பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கும் சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர், பேரா­சி­ரி­யர்­கள், மாண­வர்­கள் உள்­ளிட்ட அனை­ வ­ருக்­கும் என்­னு­டைய நன்­றியை தெரி­வித்து, என்­னு­டைய உரையை நிறைவு செய்­கி­றேன்.

இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here