முதல் கவிதை ‘அபிலாஷ்’ என்ற கவிதை வெளிவந்தது. பின்னர் முதல் கவிதைப் புத்தகமான ‘கபி கஹினி’ வெளியானது.
சட்டம் பயில்வதற்காக இங்கிலாந்து சென்று ஷேக்ஸ்பியர் மற்றும் ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டி பட்டம் பெறாமலேயே நாடு திரும்பி மாபெரும் மகாகவியானவர்.
1911-ல் எழுதிய ‘ஜன கண மன’ பாடல், இந்தியா சுதந்திரம் பெற்றபின் நாட்டின் தேசிய கீதமாக கொண்டாடப்பட்டது.
வங்காள தேசத்திற்கும், ‘அமர் சோனார் பங்களா’ என்ற பாடல் தேசிய கீதமாக பாடப்பெற்று வருகிறது.
உலகில் ஓரே ஒருவரால் இருவேறு நாடுகளுக்கு தேசிய கீதம் இயற்றிய பெருமையை பெற்றவர்.
1915-ல் ஆங்கிலேய அரசால் ‘சர்’ பட்டம் பெற்றவர்
1921-ல் விஸ்வபாரதி என்னும் பல்கலைக்கழகத்தை நிறுவியவர்.
காந்திஜியை ‘மகாத்மா’ என்ற பட்டத்துடன் முதன் முதலாக அழைத்தவர்.
1940-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் ‘இலக்கிய முனைவர் பட்டம்’ பெற்றவர்.
இலக்கியத்திற்காக முதன் முதலில் இந்தியவின் சார்பாக நோபல் பரிசை வென்றவர். கீதாஞ்சலி எனும் தான் எழுதிய நூல் 1913்ஆம் ஆண்டு வென்றது.
ரவீந்தரநாத் தாகூர் நினைவுதினம் இன்று…!
அவரின் நினைவைப் போற்றுவோம்!!!

