Madras Murasu

பாஜக நிர்வாகி உருக்கம்..! விஜய் செய்வாரா..?

”பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல் ஒப்பந்த புள்ளியில் செய் கூலி இல்லாமல் ஒப்பந்தம் கோரியுள்ள ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கினால், தமிழகத்தில் தங்க நகை செய்யும் ஆசாரிமார்களின் 10,00,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடுவார்கள்” என்று பாஜக அகில இந்திய நிர்வாகி ஆசிர்வாதம் ஆச்சாரி உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார். 
வணக்கத்திற்குரிய தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு, வணக்கம்.
இந்த என்னுடைய குறிப்பு பாஜகவின் அகில இந்திய நிர்வாகி என்ற முறையிலோ அல்லது முன்னாள் மத்திய அரசின் அதிகாரி என்ற முறையிலோ அல்லது 2G முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த whistleblower என்ற முறையிலோ அல்லாமல், நான் ஒரு பொற்கொல்லர் சமுதாயத்தை சேர்ந்தவன் என்ற முறையில், நீங்கள் கொண்டு வந்திருக்கும் தாய் மாமன் திட்டத்தின் கீழ், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல் ஒப்பந்த புள்ளியில் செய் கூலி இல்லாமல் ஒப்பந்தம் கோரியுள்ள ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கினால், தமிழகத்தில் தங்க நகை செய்யும் ஆசாரிமார்களின் 10,00,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடுவார்கள் என்பதை கூறிக்கொண்டு, இது குறித்து எனது கருத்துக்களை வீடியோ வடிவில் பதிவிட உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளி குறித்து நீங்கள் எடுக்கப்போகும் முடிவை சில நாட்களுக்கு தள்ளி வைக்குமாறு தங்க நகை ஆசாரிகள் சார்பாக வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
பேராசிரியர் (முனைவர்) ஆசீர்வாதம் ஆச்சாரி.
Scroll to Top