சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி மைய இயக்குநர் டாக்டர் என் ஆனந்தவல்லி, இக்குழுவினருக்கு மையத்தின் முக்கிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள், தொழில்நுட்பத் திறன்கள், கட்டமைப்புப் பொறியியலுக்கான பங்களிப்புகள் குறித்து விளக்கமளித்தார். அசாம், வடகிழக்குப் பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள், வெள்ளம், நிலச்சரிவுகள், பிற இயற்கை இடர்பாடுகளுக்கு உள்ளாகக் கூடிய தன்மையைக் கருத்தில் கொண்டு, கட்டமைப்புப் பாதுகாப்பு, மீள்தன்மை, நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி-ன் ஆராய்ச்சி, தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.
ACXH.jpeg)
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, மேம்பட்ட நிலநடுக்க சோதனை, ஆராய்ச்சி ஆய்வகம், காற்றுப் பொறியியல் ஆய்வகம் உள்ளிட்ட அதிநவீன ஆராய்ச்சி வசதிகளைக் குழுவினர் பார்வையிட்டனர். நிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டமைப்புகள், கட்டமைப்புகளில் காற்றின் தாக்கங்கள், கட்டமைப்புச் செயல்பாடு உள்ளிட்ட இந்த வசதிகளின் திறன்கள், பயன்பாடுகள் குறித்து விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஊடகவியலாளர்களுக்கு விளக்கினார்கள். மேலும், மையத்தின் பிற முக்கியமான ஆராய்ச்சி வசதிகளையும் பார்வையிட்ட இக்குழுவினர், தொடர்புடைய தொழில்நுட்பங்களின் செயல் விளக்கங்களைக் பார்வையிட்டனர்.
M9EB.jpeg)
இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதிலும், புதுமையான, பாதுகாப்பான, மீள்தன்மை கொண்ட, நிலையான கட்டமைப்புத் தீர்வுகளை உருவாக்குவதிலும் சிஎஸ்ஐஆர் -எஸ்இஆர்சி-ன் பங்களிப்புக் குறித்து ஊடகப் பிரதிநிதிகள் தெரிந்துகொள்ள இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமைந்தது.
