நியூட்டன் கணக்கீட்டை முறியடித்த 3ம் நூற்றாண்டு இந்திய ஃபார்முலா.
1881-ல் பாகிஸ்தானில் பெஷாவருக்கு அருகிலுள்ள ஒரு பாழடைந்த இடத்தில் தோண்டிய ஒரு விவசாயிக்கு கணித உலகைப் புரட்டிப் போடும் புதையல் கிடைத்தது.
எளிதில் உடையக்கூடிய பழமையான ஓலைச் சுவடி போன்ற பிர்ச் மரப்பட்டையின் 70 இதழ்களை அவர் கண்டெடுத்தார்.
அந்த மரப்பட்டைகளில் இருந்த எழுத்துக்கள் வரலாற்று ஆய்வாளார்களுக்குப் புரிய வில்லை.
அனைத்தும் கணக்கு சம்பந்தப் பட்ட குறிப்புகள்.
அவை இந்த ஏ. ஐ யுகத்தில் இன்றும் உலகையே வியப்பில் ஆழ்த்தும் கணித வழிமுறைகளை பதிவு செய்திருந்தன.
ஒரு மரப் பட்டையில், வர்க்கமூலம் (square root ) காண முடியாத ஒரு எண்ணின் (non Square) வர்க்க மூலத்தைக் கண்டுபிடிப்பதற்கான விதி இருந்தது.
அந்த Non Square எண்ணின் அருகிலுள்ள வர்க்கத்தைக் (square) கழிக்கவும். அதில் வரும் மீதியை அந்த வர்க்கமூலத்தின் இருமடங்கால் வகுக்கவும்.

ஒரு திருத்தத்தைச் செய்யவும். அவ்வளவுதான்.
(One leaf holds a rule for the square root of a non square number
Subtract the nearest square.
Divide the remainder by twice that root. Apply one correction. That is all.)
அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
அந்தக் கையெழுத்துப் பிரதியில் எடுத்துக் காட்டாத 339009 என்ற எண்ணின் வர்க்கமூலத்தைக் கணக்கிட்டுக் காட்டப் பட்டு உள்ளது.
அதன் விடை 11 தசம இடங்கள் (11 decimal places) வரை சரியாக உள்ளது.
மற்றொரு கணக்கில், 23 இலக்கங்களைக் கொண்ட ஒரு பின்னத்தின் தொகுதியைப் (fraction whose numerator has 23 digits) பயன்படுத்தி அது தனது விடையைச் சரிபார்க்கிறது.
தசமங்கள் இல்லை. கணக்கு போடும் இயந்திரமும் இல்லை. (No decimals, No Calculator)
வெறும் இலக்கங்கள் ஒரு வரிசையில், மற்றும் பூஜ்ஜியங்களுக்குப் பதிலாகப் புள்ளிகள்.
(Just digits in a row, and dots for zeroes. )
அந்த மரப்பட்டைகள் 1902-ல் ஆக்ஸ்போர்டின் போட்லியன் நூலகத்தை அடைந்தன.
அந்த அற்புதமான இந்தியக் கணித விதி ஆங்கிலேய கணித மேதைகளா வியத்து பாராட்டப்பட்டாலும் கடைசியில் ஒரு ஓரமாக அலமாரியில் வைக்கப்பட்டு விட்டது.
பின்னர் 70 ஆண்டுகள் கழித்து 1976-ல், இந்திய கணிதப் பேராசிரியர் எம்.என். சன்ன பசப்பா… சுரத் கல்லில் உள்ள கர்நாடக மண்டலப் பொறியியல் கல்லூரியில், பக்ஷாலி விதி சூத்திரத்தை (மேற்கண்ட மரப்பட்டையில் இருந்த இந்திய கணித விதி) மீண்டும் மொழிபெயர்த்து, அந்த விதியை ஒரு தொடர்முறையாக மாற்றினார். (re-deciphered the sutra and turned the rule into an iteration)
1979-ல், பக்ஷாலி விதியைத் தொடர்முறையில் பயன்படுத்தும்போது, அது நியூட்டனின் முறையை விட 38% வேகமாக 41-இன் வர்க்கமூலத்தை பத்து தசம இடங்கள் வரை அடைகிறது என்று அவர் அறிக்கை அளித்தார்.
(Bakhshali rule reaches the square root of 41 to ten decimal places 38% faster than Newton’s method.)

பண்டைய இந்தியாவில் மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த ஒரு பிர்ச் மரப் பட்டையிலிருந்து உருவான கணித விதி, நியூட்டனையே அவர் சாதனை செய்த துறையிலேயே தோற்கடிக்கிறது.
2012-ல், டேவிட் பெய்லி மற்றும் ஜொனாதன் போர்வெய்ன் ஆகியோர் அதற்கான காரணத்தை நிரூபித்தனர்.
ஒரு பக்ஷாலி படி என்பது இரகசியமாக இரண்டு நியூட்டன் படிகளை ஒன்றாக இணைத்தது போன்றது, அதனால் ஒவ்வொரு படியும் சரியான இலக்கங்களை சுமார் 4-ஆல் பெருக்குகிறது.
(One Bakhshali step is secretly 2 Newton steps rolled into one, so every step multiplies the correct digits by about 4)
ஐரோப்பிய அறிவுப் புரட்சிக் காலத்திற்குப் பிறகு வரை, இவ்வளவு சக்திவாய்ந்த வர்க்கமூல முறையை மேற்கத்திய கணித மரபு அறிந்திருக்க வில்லை என்று அவர்கள் வியந்து எழுதினர்.
அந்த மரப்பட்டைக்கு எவ்வளவு வயது?
ஆக்ஸ்போர்டின் 2017 கார்பன் காலக் கணிப்பின்படி, அதன் இலைகள் குறைந்தது 3 வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவை என்றும், அவற்றில் பழமையானது 3 அல்லது 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது.
அந்த விதியின் காலத்தைக் கணிக்க இயலாது. அது அமர்ந்திருக்கும் மரப்பட்டையை விடப் பழமையானதாக இருக்கலாம்.
அந்த கணித விதியைக் கண்டுபிடித்து பதிவு செய்த இந்தியக் கணித மேதை பெயர் நமக்குத் தெரியாது.
ஆனால் மரப் பட்டையைப் படித்து விளக்கம் தந்த பேராசிரியரின் பெயர் நமக்குத் தெரியும்.
இவ்வளவு பெரிய உலகளாவிய கணித சாதனை ஏன் நமது கணிதப் பாடப்புத்தகங்களில் இல்லை?
ஆதாரங்கள்: இந்திய அறிவியல் வரலாற்று இதழ், கணித பாரதி, அமெரிக்க கணித மாத இதழ், மேக்டியூட்டர், போட்லியன் நூலகங்கள்
படம்: பிர்ச் மரப்பட்டையில் எழுதப்பட்ட பக்ஷாலி கையெழுத்துப் பிரதியின் ஒரு ஏடு. புள்ளிகள் அதன் பூஜ்ஜியங்கள் ஆகும்.
நன்றி: நேஷனல் ஜியோகிராஃபிக் / போட்லியன் நூலகங்கள்
தமிழில் – சென்னை வாசி
