”இந்தியாவிலேயே விழிப்புணர்வு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. சமூக நீதிக்கு முன்னோடி மாநிலம் தமிழ்நாடு என்று திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி மாணவர்களிடம் டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைத்து பேசும் போது குறிப்பிட்டார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.மு.க. இளைஞர் அணி, மருத்துவ அணி, மாணவர் அணி மற்றும் பொறியாளர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து 10.11.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில், திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி கலையரங்கில் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி மாணவர்களிடம் டிஜிட்டல் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு
நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை எம்.பி தலைமை வகித்தார். கழக பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் பிரவீன்ஸ்ரீத ரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் எஸ்.கண்ணதாசன், கோ.ராஜசேகர், எம்.ரமேஷ், எஸ்.சதீஷ்குமார், டி.திலீப்குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் மு.க.கௌதமன், இரா.மின்னல் கமல், ஏ.வெங்கடாஜலபதி, ஆ.மாதேஸ்வரன், தேவிமகேந்திரன், மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள் டாக்டர் சவீதாகதிரவன், டி.எம்.கலையரசு, டாக்டர் முத்தையாசிவராஜ், சக்திவேல், டாக்டர் எஸ்.விக்னேஷ், டாக்டர் யோகேஸ்வரன், டாக்டர் வி.தமிழரசன், டாக்டர் சதீஷ்குமார், டாக்டர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் காலேஜ் கு.ரவி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை, பொதுப்பணித்துறை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ. வேலு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:–
சரஸ்வதி அம்மாள் அறக்கட்டளையில் தான் பொறுப்பில் இருந்த போது கம்பன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை நினைவுபடுத்தி பேசியவர் இந்த கல்லூரியில் படித்து சென்ற மாணவிகளின் பலர் அரசுத்துறை அதிகாரிகளாகவும், பல்வேறு கல்லூரிகளில் தலைவராகவும் பேராசிரியர்களாகவும் இருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் முயற்சி வரவேற்கத்தக்கது!
பலர் என்னை பல இடங்களில் பார்க்கும் பொழுது தாங்கள் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் எங்களை மாணவிகளாக நீங்கள் பார்க்காமல் தங்களுடைய மகள்களாக பார்த்து பாதுகாத்து படிக்க வைத்தீர்கள் என்று கூறுவது எனக்கு மிகுந்த பெருமை அளிப்பதாக உள்ளது. எனக்கு பெண் பிள்ளைகள் இல்லை என்ற கவலையை போக்கியது கம்பன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகள்தான்.
‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்ற வள்ளுவரின் பொன்மொழிக்கு ஏற்ப நீட் தேர்வுக்கு எதிராக விளை யாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்திருக்கும் இந்த முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், ஒரு இலக்கை அடைய வேண்டும் என்றால் ஆற்றல் அறிவு மக்களிடம் செல்வாக்கு இருப்பவர்களால் தான் முடியும் இவை அனைத்தும் அமைச்சர் உதய நிதி ஸ்டாலினிடம் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள், மாணவ, மாணவிகள் யார் பேச்சை, கேட்கிறார்கள் என்றால் அனைவரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கேட்கிறார்கள் என்பதால் தான் தமிழ்நாட்டில் பல்வேறு அமைச்சர்கள் இருந்தாலும் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை உதயநிதி ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். இதற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் மாணவ, மாணவிகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்து உதவிட வேண்டும்.
மாணவ, மாணவிகளாகிய உங்களை மருத்துவத்துறையில் தற்பொழுது படிக்க வைக்க ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு தடையாக இருப்பது நீட் தேர்வு என்றும், 28க்கும் மேற்பட்ட மாநிலங்களைக் கொண்ட மிகப்பெரிய நாடு இந்தியா என்றும் ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தமிழக முதல்வர் மட்டும் ஏன் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று ஏன் கேட்கிறார்கள் என்றால் இந்தியாவிலேயே விழிப்புணர்வு அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்றும், திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டின் அடையாளம்.
விழிப்புணர்வை உருவாக்கிய இயக்கம்!
ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டும்தான் வாக்குரிமை இருந்த காலங்கள் உண்டு என்றும் சொத்து வைத்திருந்தாலும், வரி கட்டி இருந்தாலும் கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்காத காலங்கள் இருந்ததை சுட்டிக்காட்டி பேசிய அவர் நீதிக் கட்சி தான் பெண்களுக்கு வாக்குரிமையை தமிழ்நாட்டில் முதன் முதலில் கொண்டு வந்தது என்று பேசிய அவர் இந்தியாவில் விழிப்புணர்வு உருவாக்கிய இயக்கம் திராவிட இயக்கம்.
ஒரு காலத்தில் ஆஸ்திக்கு ஆண் குழந்தை, ஆசைக்கு பெண் குழந்தை மூடநம்பிக்கைகள் இருந்த காலத்தை, மூடநம்பிக்கைகளை தூக்கி எறிந்து ஒரே வயிற்றில் பிறந்த ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சொத்தில் சம உரிமை அளித்து சட்டத்தை நிறைவேற்றியது தந்தை பெரியாரும், தலைவர் கலைஞரும் தான்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டத்தை இப்பொழுதுதான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அனைத்து மாநிலங்களும் பின்பற்றுகின்றனர். தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மும்மூர்த்தி களும் பெண்கள் படித்தால் தான் நாட்டின் சமுதாயம் முன்னேறும் என்றும், பெண்களுக்குத்தான் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த தெரியும்.
ஒத்துழைப்புத் தாரீர்!
பெண்கள் கையில் நாட்டை கொடுத்தால் தான் நாடு வளர்ச்சி அடையும் என்ற அடிப்படையில் பெண்களை படி, படி, படி என்று சொன்ன இயக்கம் திராவிட இயக்கம் இதுபோல பல்வேறு வரலாறுகள் திராவிட இயக்கத்திற்கு உண்டு.
பல்வேறு வரலாறுகளைக் கொண்ட திராவிட இயக்கம் தற்பொழுது நீட் தேர்விற்கு விலக்கு வேண்டும் என்று தொடர்ந்து அமைச்சர் உதயநிதி தலைமையில் போராடி வருகிறது நாட்டில் பலரும் பல்வேறு வகையில் அவர் அவர்கள் சக்திக்கு ஏற்றார் போல வரிகளை கட்டிக்கொண்டு வருவதாகவும் இதனால் தான் அரசு நடைபெற்று கொண்டு இருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதல்வர் கல்வித்துறை, மருத்துவத்துறை, கட்டுமானத் துறை ஆகிய மூன்று துறைகளை யும் தனது கண்களாக பாவித்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என்றும் கல்வித்துறைக்காக 20 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கி கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் நிறைவேற்றி வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகம், ஒன்றிய அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் கருதியும் கையில் எடுத்துள்ள நீட் தேர்வு கையெழுத்து இயக்கத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணைத்தலை வர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இரா.ஸ்ரீதரன், பொன்.முத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்டப் பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் ப்ரியாவிஜய ரங்கன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன்,
மாவட்ட அமைப்பாளர்கள் டி.வி.எம்.நேரு, மங்கலம் பிரபாகரன், ஏ.ஏ.ஆறுமுகம், பொன்.தனுசு, சி. ராம்காந்த், பாலமுரளிகிருஷ்ணா, ஒன்றியச் செயலாளர் பெ.கோவிந்தன், கோ. ரமேஷ், கி.ஆறுமுகம், த.செந்தில்குமார், பேரூர் செயலாளர் சி.கே.அன்பு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் எம்.ஆர்.கலைமணி, கே.கந்தன், எம்.வெங்கடேஷ் உட்பட மாண வர்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சு.ராஜாங்கம் நன்றி கூறினார்.