Home செய்திகள் இந்தியா ”சமூக நீதிக்கு முன்­னோடி மாநி­லம் தமிழ்­நாடு..!” அமைச்சர் எ.வ.வேலு

”சமூக நீதிக்கு முன்­னோடி மாநி­லம் தமிழ்­நாடு..!” அமைச்சர் எ.வ.வேலு

0
”சமூக நீதிக்கு முன்­னோடி மாநி­லம் தமிழ்­நாடு..!” அமைச்சர் எ.வ.வேலு

”இந்­தி­யா­வி­லேயே விழிப்­பு­ணர்வு கொண்ட மாநி­லம் தமிழ்­நாடு. சமூக நீதிக்கு முன்­னோடி மாநி­லம் தமிழ்­நாடு என்று திரு­வண்­ணா­ம­லை­யில் தி.மு.க. இளை­ஞர் அணி, மாண­வர் அணி, மருத்­துவ அணி சார்­பில் நீட் தேர்வு ரத்து செய்­யக் கோரி மாண­வர்­க­ளி­டம் டிஜிட்­டல் கையெ­ழுத்து இயக்­கத்தை பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் எ.வ. வேலு தொடங்கி வைத்து பேசும் போது குறிப்­பிட்­டார்.

நீட் தேர்வை ரத்து செய்­யக் கோரி தி.மு.க. இளை­ஞர் அணி, மருத்­துவ அணி, மாண­வர் அணி மற்­றும் பொறி­யா­ளர் அணி சார்­பில் கையெ­ழுத்து இயக்­கம் நடத்­தப்­ப­டு­கி­றது. அதனை தொடர்ந்து 10.11.2023 வெள்­ளிக்­கி­ழமை காலை 9.00 மணி­ய­ள­வில், திரு­வண்­ணா­மலை தெற்கு மாவட்ட தி.மு.க. இளை­ஞர் அணி, மாண­வர் அணி, மருத்­துவ அணி சார்­பில், திரு­வண்­ணா­மலை கம்­பன் மக­ளிர் கலை அறி­வி­யல் கல்­லூரி கலை­ய­ரங்­கில் நீட் தேர்வு ரத்து செய்­யக் கோரி மாண­வர்­க­ளி­டம் டிஜிட்­டல் கையெ­ ழுத்து இயக்­கம் நடை­பெற்­றது.

பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் எ.வ.வேலு

நிகழ்ச்­சிக்கு மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் சி.என்.அண்­ணா­துரை எம்.பி தலைமை வகித்­தார். கழக பொறி­யா­ளர் அணி செய­லா­ளர் கு.கரு­ணா­நிதி, மாவட்ட மருத்­துவ அணி அமைப்­பா­ளர் பிர­வீன்­ஸ்ரீ­த­ ரன், மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் எஸ்.கண்­ண­தா­சன், கோ.ராஜ­சே­கர், எம்.ரமேஷ், எஸ்.சதீஷ்­கு­மார், டி.திலீப்­கு­மார், மாவட்ட மாண­வர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் மு.க.கௌத­மன், இரா.மின்­னல்­ க­மல், ஏ.வெங்­க­டா­ஜ­ல­பதி, ஆ.மாதேஸ்­வ­ரன், தேவி­ம­கேந்­தி­ரன், மாவட்ட மருத்­துவ அணி நிர்­வா­கி­கள் டாக்­டர் சவீ­தா­க­தி­ர­வன், டி.எம்.கலை­ய­ரசு, டாக்­டர் முத்­தை­யா­சி­வ­ராஜ், சக்­தி­வேல், டாக்­டர் எஸ்.விக்­னேஷ், டாக்­டர் யோகேஸ்­வ­ரன், டாக்­டர் வி.தமி­ழ­ர­சன், டாக்­டர் சதீஷ்­கு­மார், டாக்­டர் ரவிக்­கு­மார் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.

மாவட்ட மாண­வர் அணி அமைப்­பா­ளர் காலேஜ் கு.ரவி அனை­வ­ரை­யும் வர­வேற்­றுப் பேசி­னார். நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு டிஜிட்­டல் கையெ­ழுத்து இயக்­கத்தை, பொதுப்­ப­ணித்­துறை அமைச்­ச­ரும், கழக உயர்­நிலை செயல்­திட்­டக்­குழு உறுப்­பி­ன­ரு­மான எ.வ. வேலு தொடங்கி வைத்து சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.

அப்­போது அமைச்­சர் எ.வ.வேலு பேசி­ய­தா­வது:–

சரஸ்­வதி அம்­மாள் அறக்­கட்­ட­ளை­யில் தான் பொறுப்­பில் இருந்த போது கம்­பன் கலை மற்­றும் அறி­வி­யல் மக­ளிர் கல்­லூ­ரி­யில் தான் பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளில் கலந்து கொண்­டதை நினை­வு­ப­டுத்தி பேசி­ய­வர் இந்த கல்­லூ­ரி­யில் படித்து சென்ற மாண­வி­க­ளின் பலர் அர­சுத்­துறை அதி­கா­ரி­க­ளா­க­வும், பல்­வேறு கல்­லூ­ரி­க­ளில் தலை­வ­ரா­க­வும் பேரா­சி­ரி­யர்­க­ளா­க­வும் இருக்­கி­றார்­கள்.

உத­ய­நிதி ஸ்டாலின் முயற்சி வர­வேற்­கத்­தக்­கது!

பலர் என்னை பல இடங்­க­ளில் பார்க்­கும் பொழுது தாங்­கள் கல்­லூ­ரி­யில் படிக்­கின்ற காலத்­தில் எங்­களை மாண­வி­க­ளாக நீங்­கள் பார்க்­கா­மல் தங்­க­ளு­டைய மகள்­க­ளாக பார்த்து பாது­காத்து படிக்க வைத்­தீர்­கள் என்று கூறு­வது எனக்கு மிகுந்த பெருமை அளிப்­ப­தாக உள்­ளது. எனக்கு பெண் பிள்­ளை­கள் இல்லை என்ற கவ­லையை போக்­கி­யது கம்­பன் கலை மற்­றும் அறி­வி­யல் மக­ளிர் கல்­லூ­ரி­யில் படிக்­கும் மாண­வி­கள்­தான்.

‘இதனை இத­னால் இவன்­மு­டிக்­கும் என்­றாய்ந்து அதனை அவன்­கண் விடல்’ என்ற வள்­ளு­வ­ரின் பொன்­மொ­ழிக்கு ஏற்ப நீட் தேர்­வுக்கு எதி­ராக விளை­ யாட்டு துறை அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் எடுத்­தி­ருக்­கும் இந்த முயற்சி பெரும் வர­வேற்பை பெற்­றுள்­ள­தா­க­வும், ஒரு இலக்கை அடைய வேண்­டும் என்­றால் ஆற்­றல் அறிவு மக்­க­ளி­டம் செல்­வாக்கு இருப்­ப­வர்­க­ளால் தான் முடி­யும் இவை அனைத்­தும் அமைச்­சர் உத­ய­ நிதி ஸ்டாலி­னி­டம் உள்­ளது.

தமிழ்­நாட்­டில் உள்ள இளை­ஞர்­கள், மாணவ, மாண­வி­கள் யார் பேச்சை, கேட்­கி­றார்­கள் என்­றால் அனை­வ­ரும் அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சை கேட்­கி­றார்­கள் என்­ப­தால் தான் தமிழ்­நாட்­டில் பல்­வேறு அமைச்­சர்­கள் இருந்­தா­லும் நீட் எதிர்ப்பு கையெ­ழுத்து இயக்­கத்தை உத­ய­நிதி ஸ்டாலின் கையில் எடுத்­துள்­ளார். இதற்கு திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­தில் உள்ள அனைத்து மக்­க­ளும் மாணவ, மாண­வி­க­ளும் முழு ஒத்­து­ழைப்பு கொடுத்து உத­விட வேண்­டும்.

மாணவ, மாண­வி­க­ளா­கிய உங்­களை மருத்­து­வத்­து­றை­யில் தற்­பொ­ழுது படிக்க வைக்க ஈன்­றெ­டுத்த பெற்­றோர்­க­ளுக்கு தடை­யாக இருப்­பது நீட் தேர்வு என்­றும், 28க்கும் மேற்­பட்ட மாநி­லங்­க­ளைக் கொண்ட மிகப்­பெ­ரிய நாடு இந்­தியா என்­றும் ஆனால், தமிழ்­நாட்­டில் மட்­டும் தமி­ழக முதல்­வர் மட்­டும் ஏன் தமிழ்­நாட்­டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்­டும் என்று ஏன் கேட்­கி­றார்­கள் என்­றால் இந்­தி­யா­வி­லேயே விழிப்­பு­ணர்வு அதி­கம் உள்ள மாநி­லம் தமிழ்­நாடு என்­றும், திரா­விட இயக்­கங்­கள் தான் தமிழ்­நாட்­டின் அடை­யா­ளம்.

விழிப்­பு­ணர்வை உரு­வாக்­கிய இயக்­கம்!

ஒரு காலத்­தில் ஆண்­க­ளுக்கு மட்­டும்­தான் வாக்­கு­ரிமை இருந்த காலங்­கள் உண்டு என்­றும் சொத்து வைத்­தி­ருந்­தா­லும், வரி கட்டி இருந்­தா­லும் கூட பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழங்­காத காலங்­கள் இருந்­ததை சுட்­டிக்­காட்டி பேசிய அவர் நீதிக் கட்சி தான் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரி­மையை தமிழ்­நாட்­டில் முதன் முத­லில் கொண்டு வந்­தது என்று பேசிய அவர் இந்­தி­யா­வில் விழிப்­பு­ணர்வு உரு­வாக்­கிய இயக்­கம் திரா­விட இயக்­கம்.

ஒரு காலத்­தில் ஆஸ்­திக்கு ஆண் குழந்தை, ஆசைக்கு பெண் குழந்தை மூட­நம்­பிக்­கை­கள் இருந்த காலத்தை, மூட­நம்­பிக்­கை­களை தூக்கி எறிந்து ஒரே வயிற்­றில் பிறந்த ஆணாக இருந்­தா­லும், பெண்­ணாக இருந்­தா­லும் சொத்­தில் சம உரிமை அளித்து சட்­டத்தை நிறை­வேற்­றி­யது தந்தை பெரி­யா­ரும், தலை­வர் கலை­ஞ­ரும் தான்.

தமிழ்­நாட்­டில் பெண்­களுக்கு சொத்­தில் சம உரிமை உண்டு என்று சட்­டத்தை இப்­பொ­ழு­து­தான் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்றி அனைத்து மாநி­லங்­க­ளும் பின்­பற்­று­கின்­ற­னர். தந்தை பெரி­யார் பேர­றி­ஞர் அண்ணா முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆகிய மும்­மூர்த்­தி­ க­ளும் பெண்­கள் படித்­தால் தான் நாட்­டின் சமு­தா­யம் முன்­னே­றும் என்­றும், பெண்­க­ளுக்­குத்­தான் குடும்ப பொரு­ளா­தா­ரத்தை உயர்த்த தெரி­யும்.

ஒத்துழைப்புத் தாரீர்!

பெண்­கள் கையில் நாட்டை கொடுத்­தால் தான் நாடு வளர்ச்சி அடை­யும் என்ற அடிப்­ப­டை­யில் பெண்­களை படி, படி, படி என்று சொன்ன இயக்­கம் திரா­விட இயக்­கம் இது­போல பல்­வேறு வர­லா­று­கள் திரா­விட இயக்­கத்­திற்கு உண்டு.

பல்­வேறு வர­லா­று­க­ளைக் கொண்ட திரா­விட இயக்­கம் தற்­பொ­ழுது நீட் தேர்­விற்கு விலக்கு வேண்­டும் என்று தொடர்ந்து அமைச்­சர் உத­ய­நிதி தலை­மை­யில் போராடி வரு­கி­றது நாட்­டில் பல­ரும் பல்­வேறு வகை­யில் அவர் அவர்­கள் சக்­திக்கு ஏற்­றார் போல வரி­களை கட்­டிக்­கொண்டு வரு­வ­தா­க­வும் இத­னால் தான் அரசு நடை­பெற்று கொண்டு இருக்­கி­றது.

திரா­விட மாடல் ஆட்­சி­யில் தமிழ்­நாடு முதல்­வர் கல்­வித்­துறை, மருத்­து­வத்­துறை, கட்­டு­மா­னத் துறை ஆகிய மூன்று துறை­க­ளை­ யும் தனது கண்­க­ளாக பாவித்து பல்­வேறு திட்­டங்­களை நிறை­வேற்றி வரு­கி­றார் என்­றும் கல்­வித்­து­றைக்­காக 20 ஆயி­ரம் கோடிக்கு மேல் ஒதுக்கி கல்­வித்­து­றையை மேம்­ப­டுத்த பல்­வேறு திட்­டங்­களை தமிழ்­நாடு முதல்­வர் நிறை­வேற்றி வரு­கி­றார். திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், ஒன்­றிய அர­சுக்கு எதி­ரா­க­வும், தமிழ்­நாட்டு மாண­வர்­க­ளின் நலன் கரு­தி­யும் கையில் எடுத்­துள்ள நீட் தேர்வு கையெ­ழுத்து இயக்­கத்­திற்கு அனை­வ­ரும் ஒத்­து­ழைக்க வேண்­டும்.

இவ்­வாறு அமைச்­சர் எ.வ.வேலு பேசி­னார்.

நிகழ்ச்­சி­யில் சட்­டப்­பேரவை துணைத்­த­லை­வர் கு.பிச்­சாண்டி, மாநில மருத்­து­வர் அணி துணைத்­த­லை­ வர் டாக்­டர் எ.வ.வே.கம்­பன், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் இரா.ஸ்ரீதரன், பொன்.முத்து, சட்ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சர­வ­ணன், மாவட்­டப் பொரு­ளா­ளர் எஸ்.பன்­னீர்­செல்­வம், மாவட்ட துணைச் செய­லா­ளர் ப்ரியா­வி­ஜ­ய­ ரங்­கன், நகர செய­லா­ளர் ப.கார்த்­தி­வேல்­மா­றன்,

மாவட்ட அமைப்­பா­ளர்­கள் டி.வி.எம்.நேரு, மங்­கலம் பிர­பா­க­ரன், ஏ.ஏ.ஆறு­மு­கம், பொன்.தனுசு, சி. ராம்­காந்த், பால­மு­ர­ளி­கி­ருஷ்ணா, ஒன்­றி­யச் செய­லா­ளர் பெ.கோவிந்­தன், கோ. ரமேஷ், கி.ஆறு­மு­கம், த.செந்­தில்­கு­மார், பேரூர் செய­லா­ளர் சி.கே.அன்பு, மாவட்ட துணை அமைப்­பா­ளர்­கள் எம்.ஆர்.கலை­மணி, கே.கந்­தன், எம்.வெங்­க­டேஷ் உட்­பட மாண­ வர்­கள், இளை­ஞர்­கள் என பலர் கலந்து கொண்­ட­னர்.

நிறை­வாக மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர் சு.ராஜாங்­கம் நன்றி கூறி­னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here