வெளிச்சந்தையில் கோதுமை, கோதுமை மாவு, அரிசி ஆகியவற்றின் சில்லரை விலை பணவீக்கத்தை குறைக்கும் வகையில் தனியார் கொள்முதல்தாரர்கள், வணிகர்கள், உற்பத்தியாளர்களுக்கு கோதுமை, அரிசி விற்பனை குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்திய உணவுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டலம் எஃப்ஏகியூ ரக கோதுமை, யுஆர்எஸ் ரக கோதுமை ஆகியவற்றை 15 கிடங்குகளிலிருந்தும், அரிசியை 18 கிடங்குகளிலிருந்தும் கொள்முதல்தாரர்கள் மற்றும் வணிகர்களுக்கு வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், பதிவு செய்த மொத்த கொள்முதல்தாரர்கள், வணிகர்கள், கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியாளர்களுக்கு விடுவிக்கும். இந்திய உணவுக் கழகம் வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் மின்னணு ஏலத்தை http://www.valuejunction.in/fci என்ற தளத்தில் மேற்கொள்கிறது.
கொள்முதல் குழுவில் உள்ள கொள்முதல்தாரர்கள், வணிகர்கள் மற்றும் ஆர்வமுள்ள கொள்முதல்தாரர்கள், வணிகர்கள் குழுவில் பதிவு செய்து எம்.ஜங்ஷனில் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். உணவுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டலம் 23.06.2023 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னணு ஏலத்தை நடத்துகிறது.
10 மெட்ரிக் டன் முதல் அதிகபட்சமாக 100 மெட்ரிக் டன் வரை கோதுமையை வாங்க விரும்பும் சிறு வணிகர்கள், நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் கலந்து கொண்டு, எஃப்ஏகியூ ரக கோதுமையை கிலோவுக்கு ரூ.21.50, யுஆர்எஸ் ரக கோதுமையை ரூ.21.25, அரிசியை கிலோவுக்கு ரூ.31 என்ற அடிப்படை விலையில் வாங்கலாம். மேலும் விவரங்களுக்கு www.fci.gov.in http://www.valuejunction.in/fci தளத்தை அணுகவும்.