தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் காலிப் பணியிடங்களை நிரவப்புவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கு மொத்தம் 84 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வேளாண்மை படிப்பில் இராண்டு ஆண்டு டிப்ளமோ (two years Diploma in agriculture) படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். அறிவிக்கப்பட்டுள்ள 179 உதவி தோட்டக்கலை அலுவலர் காலிப் பணிக்கு 12 ஆம் வகுப்பு படிப்புடன் இரண்டு ஆண்டு தோட்டக்கலை டிப்ளமோ (two years Diploma course in Horticulture) முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், மிகவும் பின் தங்கிய வகுப்பினர், பின் தங்கிய வகுப்பினர், சீர் மரபினர் ஆகியோருக்கும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதில் உச்சவரம்புகள் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கு குறைந்தபட்ச வயது 18 க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 32 வயது முடிந்து இருக்க கூடாது.
விண்ணப்பங்களை https://www.tnpsc.gov.in/ என்ற இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 25 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 24 ஆம் தேதி வரை விண்ணக்கலாம். டிசம்பர் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்து கொள்ள வாய்ப்பு தரப்படும். தேர்வுகள் இரண்டு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். தாள் ஒன்று, அவர்கள் பாடம் சம்பந்தப்பட்டது. தாள் இரண்டில், கட்டாய தமிழ் மொழி, பொது அறிவு ஆகிய பாடங்கள் இடம் பெறும்.
இத்தேர்வு குறித்த முழு விபரத்தையும் பார்க்கவும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் https://www.tnpsc.gov.in/ என்ற இணையத்தை பார்க்க வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலை ஆகிய படிப்புகளில் இரண்டு ஆண்டு டிப்ளமோ படித்தவர்களுக்கு அருமையான அரசு வேலைவாய்ப்பு வெளியாகி உள்ளது. இந்த படிப்பை முடித்தவராக நீங்கள் இருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் டிசம்பர் 24 ஆம் தேதி.