இந்தியன் பிரீமியர் லீக் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடினார். அவர் இப்போது தனது வருங்கால மனைவியான உத்கர்ஷா பவாருடன் புதிய பாதையில் செல்ல தயாராகிவிட்டார்.
ருதுராஜ் கெய்க்வாட், மகாராஷ்டிரா ஆல்-ரவுண்டர் உத்கர்ஷா பவாரை திருமணம் செய்துள்ளார். இதனால், ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்ட போதிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.
புதுமண தம்பதியரின் திருமணத்துக்கு முந்தைய, மெஹந்தி விழா ஜூன் 1, வியாழன் அன்று நடைபெற்றது. கெய்க்வாட், மகாராஷ்டிர மகளிர் கிரிக்கெட் வீராங்கனை உத்கரை காதலித்து வந்தார். அவர் தனது காதலியையும் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்காக குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு அழைத்து வந்தார். கேப்டன் தோனியிடம் அறிமுகம் செய்து வாழ்த்து பெற்றார்.
உத்கர்ஷா பவார் யார்?
ருதுராஜ் மற்றும் உத்கர்ஷா பவார் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், அவர்களது காதல் பற்றிய விவரங்கள் குறைவாகவே உள்ளன. உத்கர்ஷாவும் மகாராஷ்டிராவுக்காக விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரர். அவரது முழு பெயர் உத்கர்ஷா அமர் பவார். அவர் 24 வயது வேகப்பந்து வீச்சாளர். உத்கர்ஷா பவார் அக்டோபர் 13, 1998 அன்று மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிறந்தார்.