முப்படைகளில் ஒன்றான இந்தியன் ஆர்மியில் நர்சிங் உதவியாளர் பணிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆண் விண்ணப்பத்தாரர்கள், ராணுவ வீரர் நர்சிங் என்ற பணிக்கு பிப்ரவரி 13 ஆம் தேதியில் இருந்து மார்ச் 22 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண்ணும் ஒட்டுமொத்தமாக அனைத்து பாடங்களையும் சேர்த்து 40 சதவிகித மதிப்பெண்ணுக்கு குறையாமல் எடுத்து பாஸ் ஆகி இருக்க வேண்டும்.
அல்லது, 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண்ணும், ஒட்டுமொத்தமாக அனைத்து பாடங்களையும் சேர்த்து 40 சதவிகித மதிப்பெண்ணுக்கு குறையாமல் எடுத்து பாஸ் ஆகி இருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு தேர்வை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருப்போரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தாரர் வயது பதினேழரை வயது முதல் 23 – க்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 165 செண்டிமீட்டர் உயரம் இருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு உடற்கூறு நிபந்தனைகளில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி மாணவர்களுக்கு போனஸ் மதிபெண்கள் வழங்கப்படுகிறது.
எழுத்துத் தேர்வில், General Intelligence, Mathematical Aptitude, General Knowledge, Chemistry, Physics, Biology ஆகிய பகுதிகளில் இருந்து கொள்குறி வகையிலான கேள்விகள் கேட்க்கப்படும். எழுத்து தேர்வு ஆன்லைன் மூலம் ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று தொடங்குகிறது.
வேலைவாய்ப்பு விளம்பரம் முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும் ZRO SOLDIER TECHNICAL NURSING ASSISTANT CHENNAI
சிப்பாய் நர்சிங் உதவியாளர் ஆக, தேசப்பணியில் ஈடுபட ஆர்வமும் துடிப்பும் உள்ள இளைஞர்கள், www.joinindianarmy.nic.in ஆன்லைன் மூலம் பிப்ரவரி 13 ஆம் தேதியில் இருந்து மார்ச் 22 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.