இந்தியன் ரயில்வே-யில் நாடு முழுவதும் காலியாக உள்ள 9,000 தொழில்நுட்பாளர்கள் காலி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிக்கையை இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த வேலை குறித்த விண்ணப்ப பதிவு ரயில்வே தேர்வு வாரியம் இணையத்தில் மார்ச் 9 ஆம் தேதி தொடங்கும். விண்ணப்ப பதிவுக்கு ஏப்ரல் 8 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
உலககிலேயே மிகப்பெரிய நிறுவனம், இந்தியன் ரயில்வே. இது, மத்திய அரசுக்கு சொந்தமானது. நாட்டில் அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். வேலை தேடுவோரின் முதல் தேர்வாகவும் இந்தியன் ரயில்வேத்துறை விளங்குகிறது. சலுகை கட்டணத்தில் குடியிருப்பு, மருத்துவம், போக்குவரத்து என்று ரயில்வே ஊழியர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகிறது.
இந்த ரயில்வேத் துறையில் நாடு முழுவதும் 9000 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. Technician Gr I Signal பிரிவில் 1100 காலிப் பணியிடங்களும் Technician Gr III பிரிவில் 7900 காலிப் பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்போர் வயது 18 ல் இருந்து 33 க்குள் இருக்க வேண்டும்.
இந்த வேலை குறித்த விண்ணப்ப பதிவு ரயில்வே தேர்வு வாரியம் இணையத்தில் மார்ச் 9 ஆம் தேதி தொடங்கும். விண்ணப்ப பதிவுக்கு ஏப்ரல் 8 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை காண்பதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.rrbchennai.gov.in/
ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் படிப்பு முடித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பெண்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் 250 ரூபாய். மற்ற பிரிவினருக்கு 500 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு குறித்து ரயில்வே தேர்வு வாரியம் குறுகிய அளவிலான வேலைவாய்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையை கிளிக் செய்து படிக்கலாம். RRB Railway Technician Short Notice Vacancy- 2024