AIRPORTS AUTHORITY OF INDIA -வில் 490 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு பொறியியல், கம்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து மே 1 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனம், AIRPORTS AUTHORITY OF INDIA. இங்கு காலியாக உள்ள 490 Junior Executive பணிகளை நிரப்பும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. GATE 2024 தேர்வில் பாஸ் ஆன பொறியியல் பட்டதாரிகள், கம்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள், ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து மே 1 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Bachelor’s degree in Architecture and registered with Council of Architecture, Bachelor’s Degree in Engineering / Technology in Civil, Bachelor’s Degree in Engineering / Technology in Electrical, Bachelor’s Degree in Engineering / Technology in Electronics / Telecommunications / Electrical with specialization in Electronics, Bachelor’s Degree in Engineering / Technical in Computer Science / Computer Engineering / IT / Electronics அல்லது Masters in Computer Application -MCA ஆகிய படிப்புகளுடன் GATE 2024 தேர்வில் பாஸ் ஆகி இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர் வயது 01.05.2024 அன்று அதிகபட்சமாக 27-க்குள் இருக்க வேண்டும். உச்சபட்ச வயது வரம்பில், ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பங்கள், அதனோடு அனுப்பி வைக்கப்படும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்படும். AIRPORTS AUTHORITY OF INDIA -வில் Junior Executive பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல் www.aai.aero என்ற இணைத்தில் மட்டுமே வெளியிடப்படும்.
தகுதியும் ஆர்வமும் உடையவர்கள் ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து மே 1 ஆம் தேதிக்குள் www.aai.aero என்ற இணையத்தளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விபரங்களையும் இதை கிளிக் செய்து பார்க்கலாம் AAI RECRUITMET_GATE 2024

