மார்னஸ் லாபுசாக்னை அவுட் ஆக்கிய ஸமி
நிதானமாக விளையாடிய மார்னஸ் லாபுசாக்னே 26 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 26 ஓவர்களிலவ் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 5 ரன்களிலும், ஹெட் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஷர்துல் தாகூர் வீசிய பந்தில் வார்னர் அவுட்
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் நிதானமாக விளையாடி அரைசதத்தை நெருங்கிய வார்னர் 43 ரன்கள் எடுத்து ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
21 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி!
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது ஆஸ்திரேலிய அணி 21 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் சேர்த்துள்ளது. அரைசதத்தை நெருங்கியுள்ள வார்னர் 39 ரன்களுடனும், மார்னஸ் லாபுசாக்னே 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி!
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது ஆஸ்திரேலிய அணி 15 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 37 ரன்களுடனும் மார்னஸ் லாபுசாக்னே 16 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதனையொட்டி ஒரு வாரத்திற்கு மேலாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

