Home செய்திகள் ’’தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உதவித் தொகையுடன் ஓராண்டு ஆராய்ச்சி படிப்பு..!’’ ஜூன் 30 கடைசி தேதி

’’தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உதவித் தொகையுடன் ஓராண்டு ஆராய்ச்சி படிப்பு..!’’ ஜூன் 30 கடைசி தேதி

0
’’தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உதவித் தொகையுடன் ஓராண்டு ஆராய்ச்சி படிப்பு..!’’ ஜூன் 30 கடைசி தேதி

தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் வரலாறு, சமூக அறிவியல், தமிழ் மற்றும் அதோடு தொடர்புடைய துறைகளில் உதவித் தொகையுடன் கூடிய ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு, முதுகலை பட்டப்படிப்பை முடித்த கல்வியாளர்களிடமிருந்து சென்னை, எழும்பூர், ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இத்திட்டத்தின் நோக்கம், ஆர்வமுள்ள முதுகலை பட்டதாரிகள் ஆவணக் காப்பகத்தின் தொன்மையான ஆவணங்களை ஆராய்ந்து, சமூகத்திற்குப் பயனளிக்கக்கூடிய வகையில் தங்களது ஆராய்ச்சியினை மேம்படுத்திக் கொள்வதற்கும், தமிழ் நாட்டின் சமூக வரலாற்றினை வெளிக் கொண்ர்வதற்கும் உதவுவதாகும். 

விண்ணப்பத்தின் விவரங்கள் மற்றும் படிவம் ஆகியவற்றை www.tnarchives.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் மற்றும்   நேரம் 30.06.2023, மாலை 05.00 மணி.

வரலாறு, சமூக அறிவியல், தமிழ் மற்றும் இது தொடர்பான படிப்புகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யபப்டும் ஒவ்வொருவருக்கும் ஓராண்டுக்கு மாதம் ரூ.10,000 என்று ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படும். 4 பேருக்கு இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here