Home கல்வி கல்லூரிகள் ’’மூன்றாண்டு சட்டப் படிப்பு..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

’’மூன்றாண்டு சட்டப் படிப்பு..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

0
’’மூன்றாண்டு சட்டப் படிப்பு..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு, சட்டக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டப்படிப்பு முடித்தோர், இந்த மூன்றாண்டு படிப்புக்கு ஜுலை 3 ஆம் தேதியில் இருந்து ஜூலை 24 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை தரமணியில் சட்ட பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளி, மாவட்டம் வாரியாக இருக்கும் அரசு சட்டக் கல்லுரிகள், அங்கிகரிக்கப்பட்ட தனியார் சட்டக் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறுகிறது.

சென்னை தரமணி சீர்மிகு சட்டப் பள்ளியில் சேர வேண்டும் என்றால் பட்டப்படிப்பில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 55 சதவிகித மதிப்பெண் குறையாமல் எடுத்து பாஸ் ஆகி இருக்க வேண்டும். இவர்களைத் தவிர மற்ற சமூகத்தினர் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். என்.ஆர்.ஐ மாணவர்களும் 60 சதவிகித மதிப்பெண் என்பது கட்டாயம்.

மாவட்டங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள், தனியார் சட்டக் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றால் எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் 40 சதவிகித மதிப்பெண் குறையாமல் எடுத்து பாஸ் ஆகி இருக்க வேண்டும். இவர்கள் தவிர மற்ற சமூகத்தினர் குறைந்தபட்சம் 45 சதவிகித மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். என்.ஆர்.ஐ மாணவர்களும் 45 சதவிகித மதிப்பெண் என்பது கட்டாயம்.

ஜூலை 3 ஆம் தேதி முதல் ஜுலை 24 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். சீர்மிகு சட்டப் பள்ளியில் சேர எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு ரூ.500. மற்றவர்களுக்கு ரூ.1000. அரசு சட்டக் கல்லூரிகள், தனியார் சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பக் கட்டணம் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250. மற்றவர்களுக்கு ரூ.500 ஆகும்.

மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு 044-24641919 / 044-24957414 / +91 7200043361 என்ற எண்ணில் பேசலாம். மேலும் விபரங்களுக்கு http://www.tndalu.ac.in என்ற இணையத்தளத்தை பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here