தமிழ்நாடு மின் வாரியத்தில் | TANGEDCO | ’அப்ரண்டிஸ்’ வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாலிடெக்னிக் முடித்தவர்கள் ஜுலை 10 ஆம் தேதி முதல் ஜுலை 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு பயிற்சி காலத்தின் போது மாதம் தோறும் ரூ.8 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) தொழில் பழகுநர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் பாலிடெக்னிக் முடித்த டிப்ளமோ பொறியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
Electrical and Electronics Engineering ( காலிப்பணியிடம் 395), Electronics and Communication Engineering (22 ), Electronics and Instrumentation Engineering (09), Computer Engineering/ Information Technology (09 ), Civil Engineering (15), Mechanical Engineering (50) என்று மொத்தம் 500 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

SC, ST, OBC, PwD ஆகிய பிரிவுகளில் உள்ளோர் உரிய சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே அந்தந்த பிரிவுகளின் கீழ் இட ஒதுக்கீடு உரிமையை கோர முடியும். இல்லை என்றால் அவர்கள், பொதுப் பிரிவின் கீழ் கொண்டு செல்லப்படுவர். மின்வாரிய ஊழியர்களின் வாரிசுகளுக்கு 10 சதவிகித ஒதுக்கீடு உள்ளது. தொழில் பழகுநர் அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழை உரிய முறையில் நிரப்பி விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.
இந்த தொழில் பழகுநர் வேலைக்கான விண்ணப்ப பதிவு ஜுலை 10 அன்று தொடங்கி, 31 அன்று முடிவடைகிறது. www.nats.education.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு http://boat-srp.com/ என்ற தளத்தினை பார்க்கலாம்.
மாதம் ரூ.8000; ஓராண்டு கிடைக்கக்கூடிய இந்த தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு குறித்த முழுமையான அறிவிக்கையை படிக்க TANGEDCO_NOTIFICATION_DIPLOMA_APP_SELECTION (1) இங்கே கிளிக் செய்யலாம்.

