Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131
முன்னாள் அதிமுக ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற “கோப்புகளே வரவில்லை” என்று தமிழ்நாடு ஆளுநர் மறைப்பதா?” சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி - Madras Murasu
spot_img
More
    முகப்புசெய்திகள்முன்னாள் அதிமுக ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற “கோப்புகளே வரவில்லை” என்று தமிழ்நாடு ஆளுநர் மறைப்பதா?'' சட்ட...

    முன்னாள் அதிமுக ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற “கோப்புகளே வரவில்லை” என்று தமிழ்நாடு ஆளுநர் மறைப்பதா?” சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி

    ’’ராஜ்பவனில் கோப்புகளை பெற்றுக் கொண்டு - பெற்றுக் கொண்டதற்கு ஒப்புதலும் அளித்து விட்டு - முன்னாள் அதிமுக ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற “கோப்புகளே வரவில்லை” என்று தமிழ்நாடு ஆளுநர் மறைப்பதா?'' என்று சட்ட அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பி உள்ளார். 

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சமீபத்தில் எழுந்தி இருந்த கடிதத்தில், ”ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிட இசைவு ஆணைக்காக அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. எனவே ஆளுநர் இதில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் குட்கா /மாவா விநியோகிப்பாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமற உத்தரவுப்படி கிரிமினல் வழக்கு பதிவு செய்யபப்ட்டு, மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்தது, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சிபிஐ கோரியது. மாநில அமைச்சரவையும் இந்த இசைவு ஆணை கோரும் சிபைஐ கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது.

    முக்கியமான கோப்புகள்

    ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை இந்த கடிதம் தொடர்பாக எந்த பதிலும் கிடைக்காமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதபப்டுத்துவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இதே போன்று மேலும் இரண்டு நிகழ்வுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கி இசைவு ஆணை கோரியது.

    இந்த கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்களை முறையே 12.09.2022, 15.05.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த ல்கோரிக்கை கடிதங்களும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. முந்தைய அதிமுக அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலிஉம் நீதிமன்ற விசாரணையை தொடங்கிட தேவையான இசைவு ஆணையை இதுவரை ஆளுநர் வழங்கவில்லை.

    ஊழல் வழக்குகளில் இசைவு ஆணை நிலுவையில் இருபப்து தவிர, மாநில சட்டப்பேரவையில் நிறைவேறப்பட்ட 13 மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இவற்றில் இரண்டு மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. எனவே மேற்குறிப்பிட்டு இருக்கும் முக்கியமான கோப்புகள், மசோதாக்கள் மீது தனிப்பட்ட்ட கவனம் செலுத்தி, இனியும் தாமதிக்காமல் ஊழல் வழக்குகளில் நீதிமன்ற வைசாரணையைத் தொட்னக்கி இசைவு ஆணையையும் மசோதாக்களுக்கு ஒப்புதலையும் ஆளுநர் வழங்க வேண்டும்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்ட அமைச்சர் ரகுபதி கோரிக்கை விடுத்து இருந்தார்.

    ஆளுநர் மாளிகை விளக்கம்

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் கடிதம் ஊடங்களில் வெளியாகி அரசியல் விவாதங்களை கிளப்பி இருந்த நிலையில் அமைச்சர் ரகுபதியின் புகார்கள் குறித்த கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளித்தது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்களான ரமணா மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது குட்கா வழக்கில் புகார்கள் குறித்த வழக்கு சிபிஐ வசம் உள்ளதால் சட்ட விளக்கத்திற்காக நான் காத்திருக்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஜுலை 6-ம் தேதி, சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்ட அறிக்கை: 

    முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை துவக்குவதற்கு தேவையான இசைவு ஆணையை விரைந்து அனுப்புமாறும், மாநில அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறும் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு 3.7.2023 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.

    அக்கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக 6.7.2023 அன்று வெளியிடப்பட்டுள்ள ராஜ்பவன் பத்திரிக்கை செய்தியில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி மீதான ஊழல் வழக்கு தொடர்பாக உறுதிபடுத்தப்பட்ட விசாரணை அறிக்கை கிடைக்கப்பெறவில்லை என்றும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கிற்கு இசைவாணை கேட்டு எந்த கோரிக்கையும் ராஜ்பவனில் இருந்து பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் உண்மை என்னவென்றால் – முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் ஊழல் வழக்கு விசாரணையின் கோப்பு மொத்தமாக ஆளுநருக்கு 12.9.2022 அன்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கோப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையின் இறுதி விசாரணை அறிக்கை, விழிப்புணர்வு ஆணையத்தின் பரிந்துரை அனைத்தும் அடங்கியிருக்கிறது. 298 நாட்களுக்கு முன்பு உறுதிசெய்யப்பட்ட இறுதி விசாரணை அறிக்கையை பெற்றுக் கொண்டு -கோப்பை பெற்றுக் கொண்டற்கான ஒப்புதல் கையெழுத்தும் போட்டு விட்டு இன்று உறுதி செய்யப்பட்ட விசாரணை அறிக்கை கிடைக்கவில்லை என்று கூறுவது ஆளுநர் அலுவலகத்திற்கு அழகல்ல. ராஜ்பவன் வாதப்படி வைத்துக் கொண்டால் கூட- நான் ஆளுநருக்கு கடிதம் எழுதும் வரை அந்த கோப்பு குறித்து எந்த விவரமோ, விளக்கமோ கேட்டு தமிழக ஆளுநரிடமிருந்து கடிதமும் வரவில்லை. அமைச்சர் செந்தில்பாலாஜி விஷயத்தில் இவ்வளவு வேகமாக அவரை நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய ஆளுநர் ஊழல் வழக்கின் நீதிமன்ற விசாரணையை தொடர அனுமதிக்காமல் – இசைவாணையை நிறுத்தி வைத்து ஏன் இப்போது ஆதாரமற்ற ஒரு காரணத்தைச் சொல்கிறார் என்பதும் தெரியவில்லை.

    ஆளுநர் அவர்களுக்கு மீண்டும் இன்று கடிதம்

    இது மட்டுமின்றி – அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கில் இசைவாணை கோரி லஞ்ச ஒழிப்புத்துறையின் இறுதி விசாரணை அறிக்கை, விஜிலென்ஸ் ஆணையத்தின் பரிந்துரை ஆகியவை அடங்கிய ஒரிஜினல் கோப்பு – மாண்புமிகு ஆளுநருக்கு 15.5.2023 அன்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கோப்பை பெற்றுக் கொண்டதற்கு ராஜ்பவன் ஒப்புதல் கடிதமும் அளித்துள்ளது. நிர்வாக நடைமுறைப்படி அனுப்பி வைக்கப்பட்ட அந்த கோப்பு ராஜ்பவனுக்கு வரவில்லை என்று 53 நாட்கள் கழித்து ராஜ்பவன் வெளியிட்டிருக்கும் செய்தி வியப்பாகவும் – விந்தையாகவும் இருக்கிறது. ஆளுநர், அரசியல் சட்டப்படியான பணிகள் செய்வதை கைவிட்டு – கட்சி அரசியல் பணிகளை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் என்பதையே தனது அலுவலகத்திற்கு வந்த கோப்பையே வரவில்லை என்று சொல்ல வைத்திருக்கிறது என்பதே உண்மை என்று தெரிகிறது. அல்லது ராஜ்பவன் அலுவலகம் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது.

    ராஜ்பவன் பத்திரிக்கை செய்தி ஆதாரமற்றது என்பதை எல்லாம் ஆதாரத்துடன் விளக்கி- முன்னாள் அமைச்சர்கள் டாக்டர். சி. விஜயபாஸ்கர், ரமணா ஆகியோருக்கு எதிரான குட்கா ஊழல் வழக்கில் நீதிமன்ற விசாரணையை துவக்குவதற்கு தேவையான இசைவு ஆணையை விரைந்து வழங்குமாறு சிபிஐ அமைப்பிடம் இருந்து 30.6.2023 அன்று மாநில அரசுக்கு வந்துள்ள கடிதம் பற்றிய விவரத்தையும் எடுத்துக் கூறி – முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் இசைவாணை வழங்குவதை மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்கிடுமாறு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு மீண்டும் இன்று கடிதம் எழுதியிருக்கிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments