‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை ரெட்ஜெண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய படங்களைப் போல இந்த மாமன்னன் திரைப்படமும் ஒரு முக்கிய விஷயத்தை பேச உள்ளது என கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 14-ம் தேதி நிறைவடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ‘’இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகிய மாமன்னன் படத்தின் பர்ஸ்ட் லுக் 01.05.2023 அன்று வெளியாகும்’’ என்று அந்த படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று 29.04.2023 மாலை 6 மணிக்கு அறித்தது. அந்த முதல் (MAAMANNAN first look) படத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

