Home வேலை வாய்ப்பு அரசு வேலை வாய்ப்பு மத்திய அரசு வேலை – 8326 காலிப் பணியிடம்..!’’ 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு வேலை – 8326 காலிப் பணியிடம்..!’’ 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம்

0
மத்திய அரசு வேலை – 8326 காலிப் பணியிடம்..!’’ 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள 8326 பணி இடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு பாஸ் ஆகி இருப்போர், இந்த வேலைக்கு 31-07-2024  வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர் வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி, எஸ்.சி., எஸ்டி., பொருளாதாரத்தில் பின் தங்கியோர், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர், விதவையர் என்று பல்வேறு இட ஒதுக்கீடு பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணம் ரூ.100 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு கட்டணம் கிடையாது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் என்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை. எம்டிஎஸ் என்று அழைக்கப்படும் மல்ட்டி டாஸ்க் சர்வீஸ் பணிக்கு விண்ணப்பிப்போருக்கு உடல் திறன் தேர்வு கிடையாது.

எழுத்து தேர்வானது தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு என்று மொத்தம் 13 மொழிகளில் நடைபெறும். தேர்வர்கள் இதில் விரும்பும் மொழி ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். எழுத்து தேர்வில் பாஸ் ஆனால் போதும். ஆனால், ஹெவில்தார் பணிக்கு விண்ணப்பிப்போர் உடல் திறன் தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.

காலிப் பணி இடம் : MTS : 4887
Havaldar in CBIC and CBN : 3439 

முக்கிய தேதிகள் :

விண்ணப்ப பதிவு காலம்:  27-06-2024 to 31-07-2024

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் : 01-08-2024 (2300 hrs)
விண்ணப்பம் திருத்தும் காலம் : 16-08-2024 to 17-08-2024
எழுத்து தேர்வு : Oct-Nov 2024
உதவி எண் : 1800 309 3063 

இத்தேர்வு குறித்த முழுமையான அறிக்கையை NoticeOfMTSNT_20240627 இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here