மத்திய அரசின் பொத்துறை வங்கிகளில் காலியாக இருக்கும் 6128 கிளார்க் பணி இடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான Bank of Baroda, Canara Bank, Indian Overseas Bank, UCO Bank, Bank of India, Central Bank of India, Punjab National Bank, Union Bank of India, Bank of Maharashtra, Indian Bank, Punjab & Sind Bank ஆகிய 11 பொதுத்துறை வங்கிகளில் ஒருங்கிணைந்த ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்கும் பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள், 02.07.1996 – 01.07.2004 ஆகிய தினங்களுக்குள் பிறந்திருக்க வேண்டும். இந்த இரண்டு நாட்களில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டு பிரிவிற்குள் வரும் சாதியினருக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகளும் அதிகபட்சம் 10 ஆண்டுகளும் வயது சலுகை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என்று எழுத்து தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். கொள்குறி வகையிலான இந்த தேர்வானது தமிழ், ஆங்கிலம், இந்தி என்று மொத்தம் 13 மொழிகளில் நடக்கும். தமிழ்நாடு, பாண்டிச்சேரி விண்ணப்பத்தாரர்கள், தமிழ் வழியில் தேர்வினை எழுதலாம்.

இந்த வேலைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 21 ஆம் தேதியுடன் முடிகிறது. இத்தேர்வினை எழுதுவோருக்கு 12.08.2024 to 17.08.2024 ஆகிய நாட்களில் எழுத்து தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும். ஆகஸ்ட் மாதம் முதல்நிலைத் தேர்வும் அக்டோபர் மாதம் முதன்மைத் தேர்வும் நடைபெறும். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், வேலைக்கு தேர்வு பெற்றோர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்த தேர்வு குறித்த முழுமையான அறிவிப்பினை CRP_Clerks_XIV_Final_Notification_28.6.24 இங்கே கிளிக் செய்து படிக்கலாம். பாடத்திட்டம், கல்வித்தகுதி, மாதிரி சான்றிதழ் என்று இத்தேர்வுக்கு தேவையான பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை முழுமையாக படித்து விட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்ய https://ibpsonline.ibps.in/crpcl14jun24/ என்ற தளத்தை கிளிக் செய்ய வேண்டும். இத்தேர்வு எழுதும் விண்ணப்பத்தாரர் website www.ibps.in என்ற இணையத்தளத்தை தொடர்ந்து பார்த்து வர வேண்டும்.

