மத்திய அரசுக்கு சொந்தமான Central Bank of India – வில் 3000 அப்ரண்டீஸ் ஆள் தேர்வுக்கான அறிக்கை வெளியாகி இருக்கிறது. பட்டதாரிகள், மார்ச் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆண் – பெண் இருபாலாரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் எழுத்து தேர்வு மார்ச் 10 ஆம் தேதி நடக்கிறது.
பொதுத்துறை வங்கிகளில் செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, நாடு முழுவதும் 4500-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் 31,000 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் ஆண்டு வர்த்தகம் 6 லட்சம் கோடி ரூபாய். 113 ஆண்டு பழமையான பாரம்பரியம் கொண்டது. இவ்வங்கியானது அப்ரண்டீஸ் பணிக்கு 3000 பட்டதாரிகளை நாடு முழுவதும் வேலைக்கு அமர்த்த இருக்கிறது. மாநிலம் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களில் தமிழ்நாட்டில் சென்னை (40), கோவை (36), மதுரை (33), திருச்சி (33) ஆகிய இடங்களில் 142 காலி இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தாரர், 01.04.1996 முதல் 31.03.2004 ஆகிய தேதிகளுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். 1984 ஆம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி.,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் உச்சபட்ச வயதில் தளர்வுகள் உண்டு.
விதவைகள், சட்டப்படி தனித்து வாழும் பெண்கள் ஆகியோரில் பொருளாதரத்தில் பின் தங்கியவர்கள், பொதுப்பிரிவினர் 35 வயது வரையும் ஓபிசி பிரிவினர் 38 வயது வரையும் எஸ்சி., எஸ்டி பிரிவினர் 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். 31.03.2020 ஆம் ஆண்டுக்கு பிறகு பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பணி நியமனம் குறித்த அறிவிப்பு www.nats.education.gov.in இந்த இணையத்தில் வெளியாகும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை உண்டு. 12 மாதங்கள் மட்டுமே பணியில் இருக்க முடியும்.
எழுத்து தேர்வில் 1. Quantitative, General English, & Reasoning Aptitude and Computer Knowledge 2. Basic Retail Liability Products 3. Basic Retail Asset Products 4. Basic Investment Products 5. Basic Insurance Products ஆகியப் பகுதிகளில் இருந்து, கொள்குறி வகையில் கேள்விகள் கேட்க்கப்படும். விண்ணப்பத்தாரர்களுக்கு உள்ளூர் மொழியை பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 8 அல்லது 10 அல்லது 12 ஆகிய வகுப்புகளில் உள்ளூர் மொழியை கண்டிப்பாக படித்திருக்க வேண்டும்.
தகுதியும் விரும்பமும் உள்ள பட்டதாரிகள், பிப்ரவரி 21 ஆம் தேதியில் இருந்து மார்ச் 6 ஆம் தேதி வரை https://nats.education.gov.in என்ற தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விபரங்களை ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள வங்கியின் அறிவிப்பினை இங்கே கிளிக் செய்து பார்க்கலாம் Notification-Engagement-of-Apprentices-2024-25-central bank of india