Home வேலை வாய்ப்பு அரசு வேலை வாய்ப்பு ’’ஆர்பிஎப் சப்-இன்ஸ்பெக்டர் 452; போலீஸ் 4,208 ..! தேர்வு அறிவிப்பு வெளியானது

’’ஆர்பிஎப் சப்-இன்ஸ்பெக்டர் 452; போலீஸ் 4,208 ..! தேர்வு அறிவிப்பு வெளியானது

0
’’ஆர்பிஎப் சப்-இன்ஸ்பெக்டர் 452; போலீஸ் 4,208 ..! தேர்வு அறிவிப்பு வெளியானது

ரயில்வே பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டர் 452, போலீஸ் 4208 வேலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விட்டது. ஆக மொத்தம் 4660 காலிப்பணியிடங்களுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதியில் இருந்து மே 14 ஆம் தேதி வரை ஆர்.ஆர்.பி இணையத்தளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆர்.ஆர்.பி என்று அழைக்கப்படும், இந்தியன் ரயில்வே பாதுகாப்புக்கு ஆள் சேர்க்கும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் (452), கான்ஸ்டபிள் (4208) என்று மொத்தம் 4660 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். மொத்தம் உள்ள காலிப்பணி இடங்களில் 15 சதவிகித இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

எந்தவொரு பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 20 முதல் 28 க்குள் வயது இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி உச்சபட்ச வயது வரம்பில் இனம் வாரியாக தளர்வுகள் உண்டு.

கான்ஸ்டபிள் வேலைக்கு 10 ஆம் வகுப்பு பாஸ் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 28 வயதுக்குள் இருப்போர் இந்த வேலைக்கு வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி உச்சபட்ச வயது வரம்பில் இனம் வாரியாக தளர்வுகள் உண்டு.

எஸ்சி., எஸ்டி., முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் 250 ரூபாய். மற்ற பிரிவினருக்கு தேர்வு கட்டணம் 500 ரூபாய். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, உருது, கொங்கனி, மலையாளம், மராத்தி, குஜராத்தி, கன்னடம், பெங்காலி, ஒடியா, பஞ்சாபி, அஸ்ஸாமி, மணிப்பூரி என்று அனைத்து அட்டவனையிடப்பட்ட மொழிகளிலும் வினாத்தாள் இருக்கும்.

எழுத்து தேரிவில் Arithmetic, General Intelligence and Reasoning, General Awareness ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்க்கப்படும். எழுத்து தேர்வில் வெற்றி பெறுவோர் உடல் திறன் (UR/OBC -165  SC/ST 160 HEIGHT – IN CMS) தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதன்பின்னர் மருத்துவ பரிசோதனை உண்டு. முடிவாக, இறுதி பட்டியல் வெளியாகும்.

இந்த வேலைவாய்ப்பு குறித்த குறுகிய அறிவிப்பினை முழுமையாக படிக்கலாம் RPF_sub_inspector_constable_Recruitment-2024_Short-Notice_madrasmurasu

ரயில்வே பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டர் 452, போலீஸ் 4208 வேலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விட்டது. ஆக மொத்தம் 4660 காலிப்பணியிடங்களுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதியில் இருந்து மே 14 ஆம் தேதி வரை ஆர்.ஆர்.பி இணையத்தளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ளோர் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையம் வழியாக மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here