பொன்னியின் செல்வன் கடந்த ஆண்டு இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது. தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதி இல்லாததால் காலை 9 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்கின. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காலை 5 மற்றும் 6 மணிக்கு முக்கிய மையங்களில் முதல் காட்சிகள் துவங்கின. அமெரிக்காவில், இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்கியது. தற்போது படத்தின் முதல் விமர்சனம் டுவிடரில் வந்துள்ளது.
‘பொன்னியின் செல்வன்-2 ‘ படத்தின் முதல் காட்சியை இப்படத்தில் நடித்த நட்சத்திரங்களான கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம், ஜெயராம் ஆகியோர் சென்னையில் வெவ்வேறு திரையரங்குகளில் பார்த்து வருகின்றனர். ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். காசி தியேட்டரில் ஏற்பட்ட நெரிசலில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. நடிகர் கார்த்தி மீதும் கண்ணாடி சிதறல்கள் விழுந்ததாதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதன்படி, நடிகர்கள் ஜெயம் ரவி, வெற்றி திரையரங்கிலும் கார்த்தி, காசி திரையரங்கிலும் ஜெயராம் வடபழநி திரையரங்கிலும் ரசிகர்களுடன் ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படத்தை பார்த்துள்ளனர். அப்போது ரசிகர்கள் இவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் கூறுகையில், படத்தின் முதல் 15 நிமிடங்களே பிரமாதம். படத்தின் ஹைலைட் நந்தினி-கரிகாலன் மோதல். விக்ரம் அடித்தார். கார்த்தியும் ஐஸ்வர்யா ராயும் நல்லவர்கள். ஜெயம் ரவி ஆதரிக்கிறார். இசை நன்றாக செல்கிறது. சிறந்த கலை இயக்கம். மெதுவான கதைசொல்லல். சிலிர்ப்பான தருணங்கள் இல்லாவிட்டாலும், பார்க்கத் தூண்டும் திரைப்படம். ஒரு நேர்த்தியான பீரியட் டிராமா. இது ஒரு கலவையான படம்’’ என்கிறார்கள்.

