சி.யு.இ.டி (பி.ஜி) – 2023 தேர்வு முடிவுகளின் அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் பல்வேறு முதுநிலை பட்டம் மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளில் சேர இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 10.08.2023 வரை நீட்டித்துள்ளது.
ஏற்கனவே விண்ணப்பிக்க முயற்சி செய்து முழுமையாக சமர்ப்பிக்க இயலாதவர்களுக்கும், புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
https://www.pondiuni.edu.in/admissions-2023-24/ என்ற இணையதள இணைப்பில் விண்ணப்பங்கள் உள்ளன. தேவையான தகுதி அளவுகோல்கள் மற்றும் சி.யு.இ.டி (பி.ஜி) தேர்வு தாள்கள் குறித்து பல்கலைக்கழக தளத்தில் உள்ள தகவல் கையேட்டைப் பார்க்கலாம்.
இத்தகவலை புதுச்சேரி பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் தெரிவிட்டுள்ளார்.