மல்யுத்த வீராங்கணைகளை பாலியல் துன்புறுத்தல் செய்த பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப்பட வேண்டும் என்று டெல்லியில் மல்யுத்த வீரர் வீராங்கணைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போட்டிகளில் வென்றெடுத்த பதக்கங்களை கங்கையில் வீசச் சென்றனர். அவர்களை போலீஸ் தடுத்து நிறுத்தியது. இந்நிலையில் 5 நாள் கெடு விதித்து போராடி வருகின்றனர்.
டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் கூறுகையில், “40 கிரிமினல் வழக்குகள் பதியப்பட்ட கயவன் பிரிஜ் பூஷண் சிங் இன்று வரை கைது செய்யப்படவில்லை ஏன்? இது அப்பட்டமான அநீதி இல்லையா?
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக குரல் எழுப்பிய மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் இந்நாட்டின் ஹீரோக்கள், சாம்பியன்கள் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
பிரிஜ் பூஷண் சரண் சிங் கைது செய்யப்பட்டு, மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்”.