பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் நகருக்கு 13 ஜூலை 2023 பிற்பகலில் சென்றார். அவரை ஃபிரான்ஸ் நாட்டுப் பிரதமர் எலிசபத் போர்ன், விமான நிலையத்திற்கே வந்து பிரதமர் நரேந்திர மோடியை அன்போடு வரவேற்றார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் பாரீஸில் நடைபெறும் ‘பிரான்ஸ் தேசிய தினம்’ அல்லது பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இந்தியா-ஃபிரான்ஸ் இடையேயான உத்தி சார்ந்த கூட்டாண்மையின் 25-வது ஆண்டு நிறைவையும் இப்பயணம் குறிக்கிறது.
கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜன் ஆஃப் ஹானர் என்ற ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு இமானுவேல் மெக்ரான் வழங்கினார். இந்திய மக்களின் சார்பாக அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். பாரிஸில் உள்ள எலிசீ மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.