நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவ படிப்பில் (எம்.பி.பி.எஸ்) மத்திய அரசுக்கு 15 சதவிகித சீட் உள்ளது. அந்த இடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ், ஜிப்மர், ராணுவ மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜுலை 20-ஆம் தேதி முதல் ஜுலை 25-ஆம் தேதி நண்பகல்12 மணி வரை எம்.பி.பி.எஸ் சீட்க்கு விண்ணப்பிக்கலாம். 25 ஆம் தேதி இரவு வரை விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம். 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை விருப்பப்படும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ சீட்டை தேர்வு செய்யலாம். அதாவது சாய்ஸ் பில்லிங் செய்து கொள்ளலாம். மாணவ-மாணவிகள் படிக்க விரும்பும் கல்லூரி எது? என்று தேர்வு செய்து கொள்ளலாம்.

ஜுலை 27-ம் தேதி முதல் 28-ம் தேதிகளில் சீட் ஒதுக்கீடு நடைபெறும். 29-ம் தேதி எம்.பி.பி.எஸ் சீட் ஒதுக்கப்பட்டது குறித்த ரிசல்ட் வெளியிடப்படும். 30- ஆம் தேதி, உரிய ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். ஜுலை 31 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் போய் சேர வேண்டும். ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 6-ம் தேதிக்குள் அட்மிஷன் முடித்த விபரங்களை, சான்றிதழ்களை இந்திய மருத்துவ ஆணையத்துக்கு அந்தந்த மருத்துவக் கல்லூரிகள் தெரிவிக்க வேண்டும்.

