நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் இந்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக புதுடெல்லி தீன்மூர்த்தி பவனில் செயல்பட்டு வருகிறது. இங்கு போட்டோகிராபர் தேவை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பட்டப்படிப்புடன் போட்டோகிராபி துறையில் குறைந்தபட்சம் முன்று ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். போட்டோகிராபி ரெப்ரோகிராபி ஆகிய துறைகளில் சான்றிதழ் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
மைக்ரோ பைலிங் துறையில் ஓர் ஆண்டு முன் அனுபவம் இருப்பது விரும்பத்தக்கதாக ஏற்றுக் கொள்ளப்படும்.
வயது 28-க்குள் இருக்க வேண்டும்.
ஆண்/பெண் இருபாலாரு விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடம் 3
பொதுப்போட்டி : 2, பொருளாதாரத்தில் நலிவுற்றோர் 1.
சம்பள விகிதம்: லெவல் 5 (29,200-92,300)
கடைசி தேதி: 05.07.2023.
விருப்பமுள்ள ஆட்சேபகர்கள் 05.07.2023 மாலை 5.30 மணிக்குள் இந்த அலுவலக முகவரி தி டைரக்டர், நேரு மெமோரியல் மியூசியம் & லைப்ரரி, தீன் மூர்தி இல்லம், புதுடெல்லி 110011 என்ற முகவரிக்கு இணையத்தில் https://nehrumemorial.nic.in/ உள்ள மாதிரி விண்ணப்பபடிவத்தில் கல்வித் தகுதி, அனுபவ சான்றிதழ்கள் முதலியவற்றின் சுய-கையொப்பமிட்ட நகல்களுடன் தங்களது விண்ணப்பத்தை அனுப்பலாம்.

