என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனம், தனது சுரங்கப் பணிகளில் தொழில்துறை பயிற்சியாளர் வேலைக்கு 500 பேரை தேர்வு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இன்ஜினியர், டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் இந்த வேலைக்கு ஜுலை 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால் நிலம் எடுப்பில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
தொழில் துறை பயிற்சியாளர் (நிலக்கரி சுரங்கம் தோண்டும் எந்திரம் கையாளுதல்): 238.
பணிக் காலம்: 3 ஆண்டுகள்
கல்வித் தகுதி: டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள் (* All Diploma / Degree in Engineering should have been acquired through Full Time mode of study, recognized by the AICTE/UGC/State Board of Technical Education).
பயிற்சி காலத்தில் மாத ஊதியம்: முதல் ஆண்டு ரூ.18,000. இரண்டாம் ஆண்டு ரூ.20,000. மூன்றாம் ஆண்டு ரூ.2,000.
தொழில் துறை பயிற்சியாளர் (சுரங்கம் மற்றும் சுரங்கம் தோண்டுபவர்களுக்கு உதவிடும் பணி): 262.
கல்வித்தகுதி: ஐடிஐ பிட்டர், ட்டர்னர், எலெக்ட்ரிசியன், வெல்டிங், டீசல் மெக்கானிக், டிராக்டர் மெக்கானிக், சிவில், பவுண்டரி, கேபிள் இணைப்பு (ITI – Fitter or Turner or Electrician or Welding or MMV or Diesel Mechanic or Tractor Mechanic or Civil or Foundry or Cable Jointing Trades with NAC Certification)
காலம்: 3 ஆண்டுகள்
பயிற்சி காலத்தில் மாத ஊதியம்: முதல் ஆண்டு ரூ.14,000. இரண்டாம் ஆண்டு ரூ.16,000. மூன்றாம் ஆண்டு ரூ.18,000.
வயது வரம்பு: பொதுப்பிரிவு/பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர்-37 வயது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) 40 வயது. எஸ்சி/எஸ்டி 42 வயது.
மத்திய அரசின் இடஒதுக்கீடு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
விண்ணப்பம்: 09.06.2023 முதல் 08.07.2023 வரை ஆன்லையில் விண்ணப்பிக்க வேண்டும்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், நிலம் எடுப்பில் பாதிக்கப்பட்டவர்கள் (exclusively from Project Affected Persons (PAPs) of NLCIL, Neyveli Units) மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். நெய்வேலி நிலகரி நிறுவனத்தின் கிளைகள் அனைத்திலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் பணி அமர்த்தப்படுவர். வேலைவாய்ப்பு விளம்பரத்தை முழுமையாக படித்து இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். முழு விபரங்களுக்கு https://www.nlcindia.in/n என்ற இணையத்தை பார்க்கவும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு உண்டு. அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் வேலைக்கு ஆள் தேர்வு நடக்கும். மேலும், மத்திய அரசு பணிகளில் உள்ள இடஒதுக்கீடு அடிப்படையில் பணி நாடுநரின் இறுதிபட்டியல் வெளியிடப்படும்.
கூடுதல் விபரங்களுக்கு: REGD. OFFICE: NLC India Limited, No. 135, EVR Periyar High Road, Kilpauk, Chennai- 600010
CORPORATE OFFICE: Block-1, Neyveli-607 801, Cuddalore District, Tamil Nadu.
Website: www.nlcindia.in / email: help.recruitment@nlcindia.in / Phone: 04142-255135 என்ற விலாசத்திற்கு தொடர்பு கொள்ளலாம்.