Home செய்திகள் ”தைலாபுரத்தில் ‘தமிழில் பேசு…. தங்கக் காசு’ போட்டி ஞாயிறு நடைபெறுகிறது..!’’

”தைலாபுரத்தில் ‘தமிழில் பேசு…. தங்கக் காசு’ போட்டி ஞாயிறு நடைபெறுகிறது..!’’

0
”தைலாபுரத்தில் ‘தமிழில் பேசு…. தங்கக் காசு’ போட்டி ஞாயிறு நடைபெறுகிறது..!’’
தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ப்புலவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்காக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் ‘‘தமிழில் பேசு… தங்கக் காசு’’ என்ற தலைப்பில் போட்டிமன்றம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 14-ஆம் நாள் நடைபெறவிருந்த இந்தப் போட்டி தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
தள்ளிவைக்கப்பட்ட ‘‘ தமிழில் பேசு… தங்கக் காசு’’ போட்டி வரும் நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 21) திட்டமிட்டபடி நடைபெறும். அதில் பங்கேற்க 14 பேர் பெயர் கொடுத்துள்ளனர். போட்டியைக் காண விரும்பும் பார்வையாளர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here