இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, “தமிழர்களின் வீரமிகு பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடை ஏதுமில்லை எனும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, தமிழ்நாட்டுக்கும் – நம் பாரம்பரிய விளையாட்டுக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சட்டப்போராட்டமே இவ்வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும் இத்தீர்ப்பை வரவேற்போம்” என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

