கம்பனைப் போன்று ஒரு ரசிகன் கிடைப்பதற்கு வள்ளுவர் 700 ஆண்டுகள் காத்திருந்தார். டி.கே.சி.யைப் போன்ற ஒரு ரசிகன் கிடைப்பதற்கு கம்பன் 1000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது’ என ஜஸ்டிஸ் மகாராஜனால் புகழாரம் சூட்டப்பட்டவர். ஆடத்தெரியாத கடவுள் எனும் அற்புதமான புத்தகத்தை எழுதியவர் நீதியரசர் மகாராஜன்.
பனிரெண்டாம் வகுப்பு ’இந்து சமயம் மற்றும் பண்பாடு’ என்ற புத்தகத்தில் முதல் பக்கத்திலே சொல்லப்பட்டிருக்கும். பண்பாடு என்ற சொல்லைத் தந்தவர் என்று. தமிழுக்குப் பண்பாடு என்ற சொல்லைத் தந்தவர்.
டி.கே.சி-யின் சஷ்டியப்த பூர்த்தி 1942-ல் குற்றாலம் அருகிலுள்ள திருவிலஞ்சிக் குமாரசாமி கோயிலில் நடைபெற்றபோது பெரியார் அதில் கலந்து கொண்டு வாழ்த்தினார். முருகன் கோயிலில் நடக்கிற நிகழ்ச்சிக்கு நீங்கள் ஏன் போக வேண்டும் எனச் வினா எழுப்பிய மானுடர்களிடம் ‘அறுபதாம் கல்யாணம் முருகனுக்கா நடக்கிறது? முதலியாருக்குத் தானப்பா நடக்கிறது!’ என்று சொன்னாராம் பெரியார். 20.07.1929-ல் திருநெல்வேலியில் “பெரியார்” படத்தைத் திறந்துவைத்து ரசிகமணி ஆற்றிய உரை அற்புதமானது.
டி.கே.சி-யின் கடிதங்கள் மாபெரும் இலக்கியச் செல்வம் கொண்டவை. ரசனையின் எண்ணம் என்று இன்றைக்கு கடிதங்களைப் பற்றி அலாதியாக பேசுகிறோம். ஆனால் அன்றே கடிதங்கள் எழுதி தமிழை வளர்த்தவர். ஆதலால்தான் கடித இலக்கியங்களின் முன்னோடி தமிழ் கூறும் நல்லுலகத்தால் போற்றப்படுகிறார்.
இவரின் உரையாடலை கேட்க மூதறிஞர் ராஜாஜி, நேரு, போன்ற பெருமக்கள் தென்காசி மற்றும் குற்றாலம் வந்து சேர்வார்களாம்.
“வட்டதொட்டி” அந்த காலத்திலே அதுவும் நெல்லையில் இவரின் வீட்டின் முன் கூடுவது புகழ்பெற்றதாக இருந்திருக்கிறது.
இந்த அமைப்பில் கல்கி, ராஜாஜி, வையாபுரிப்பிள்ளை உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
அப்படிப்பட்ட மனிதர்களை தந்த மண்.
நெல்லை..!
டி.கே.சிதம்பர முதலியார் எனும் மாமனிதர் பிறந்ததினம் இன்று..!
– வீரசோழன் க.சோ.திருமாவளவன்