அரசு சித்த மருத்துவமனைகளில் சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant) காலிப்பணியிடம் அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஜுன் 20-ம் தேதியில் இருந்து ஜுலை 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். DIPLOMA IN NURSING THERAPY COURSE (D.N.T) படிப்பினை முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி)
காலிப்பணியிடம்: 67 (ஆண்-36, பெண்-31)
பணி: சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant)
கல்வித்தகுதி: DIPLOMA IN NURSING THERAPY COURSE (D.N.T)
வயது: 18 முதல் 58. (தமிழ்நாடு அரசு விதிகளின்படி வயது வரம்பில் விதிகள் பின்பற்றப்படும்)
விண்ணப்ப கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை ஆகியோருக்கு கட்டணம் ரூ.300. மற்றவர்களுக்கு ரூ.600
விண்ணப்பம்: ஜுன் 20-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை
விண்ணப்பம் திருத்தம்: ஜுலை 13-ம் தேதி முதல் ஜுலை 15 வரை
தேர்வு முறை: டிப்ளமோ படிப்புக்கு 50% மார்க். பிளஸ்டூ 30 மார்க். 10-ம் வகுப்பு 20% மார்க்.
எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வுகள் எதுவும் இல்லை.